பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியான நிலையில், சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க பாஜகவுக்கு கூட வாக்களிப்போம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முன்னதாகத் தெரிவித்தார்.
பாஜகவின் பக்கம் சாய்கிறாரா மாயாவதி? - பிரியங்கா காந்தி விமர்சனம் - Mayawati's 'will even vote for BJP' remark
டெல்லி : ”சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க பாஜகவுக்குகூட வாக்களிப்போம்” என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
Gandhi
இந்நிலையில், இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள பிரியங்கா காந்தி, ”வேறு ஏதேனும் சொல்ல வேண்டியது உள்ளதா?” என மாயாவதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என முன்னதாக மாயாவதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Oct 29, 2020, 6:33 PM IST