தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விகாஸ் துபே என்கவுன்ட்டர்: உ.பி. அரசைச் சாடிய கபில் சிபல் - உத்தரப் பிரதேச அரசை சாடிய கபில் சிபல்

டெல்லி: விகாஸ் துபேவை பாதுகாப்பாக விசாரணைக்கு அழைத்துவர முடியாத அளவுக்கு உத்தரப் பிரதேச அரசு மிகவும் சக்தியற்றதா என காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

விகாஸ் துபே என்கவுண்டர்: உத்தரப் பிரதேச அரசை சாடிய கபில் சிபல்
விகாஸ் துபே என்கவுண்டர்: உத்தரப் பிரதேச அரசை சாடிய கபில் சிபல்

By

Published : Jul 11, 2020, 6:43 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலைசெய்த ரவுடி கும்பலின் தலைவன் விகாஸ் துபே நேற்று முன்தினம் மத்தியப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டார். அங்கிருந்து அவரை அழைத்துவந்தத வாகனம் விபத்திற்குள்ளானது. இதையடுத்து, வாகனத்திலிருந்து தப்ப முயன்ற விகாஸ் துபேவை காவலர்கள் சுட்டுக்கொன்றனர்.

இதுகுறித்து, பல தரப்பினர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளைப் பதிவுசெய்துவந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல், “குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பாக விசாரணைக்கு அழைத்துவர முடியாத அளவுக்கு உத்தரப் பிரதேச அரசு மிகவும் சக்தியற்றதா? அல்லது இதுபோன்ற சம்பவங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களைப் பாதுகாப்பதற்காகவா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details