கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும், காங்கிரஸ் ஆட்சியை கலைக்க பாஜக முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் அடுத்த இலக்கு மத்தியப் பிரதேசமா? - மத்தியப் பிரதேசம்
போபால்: கர்நாடகாவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க பாஜக முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
bjp
இதுகுறித்து பாஜக மூத்தத் தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "மத்தியப் பிரதேச அரசை நாங்கள் கலைக்க மாட்டோம். ஆனால் ஆட்சி கலைந்தால் அதற்கு அவர்கள் தான் காரணமாக இருப்பார்கள். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே குழப்பம் நிலவுகிறது. ஆட்சி கவிழ்ப்பு நடந்தால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.