தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிஎன்என் சேனலை வாங்குகிறாரா அமேசான் சிஇஓ? - அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

சான் பிரான்சிஸ்கோ: புகழ்பெற்ற சிஎன்என் செய்தி செனலை, அமேசான் தலைமை நிர்வாக அலுவலர் ஜெஃப் பெசோஸ் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

eff
eff

By

Published : Oct 29, 2020, 5:25 PM IST

அமேசான் தலைமை நிர்வாக அலுவலரான ஜெஃப் பெசோஸ், 200 பில்லியன் டாலர் செல்வத்தை ஈட்டிய உலகின் முதல் நபராக மாறியுள்ளார். சுமார், 56 வயதான அவர் தற்போது 205 பில்லியன் டாலர் மதிப்புடையவர்.

இந்நிலையில், AT&T நிறுவனத்திற்கு சொந்தமான கேபிள் நியூஸ் நெட்வொர்க் (சிஎன்என்) வாங்குவதற்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் ஏற்கனவே, 2013இல் “தி வாஷிங்டன் போஸ்ட்” என்னும் செய்தித்தாள் நிறுவனத்தை 250 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். இருப்பினும், அமேசான் நிறுவனர் சிஎன்என்ஐ வாங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதுகுறித்து பேசிய லைட்ஷெட் பார்ட்னர்ஸின் தொழில்நுட்ப ஆய்வாளர் ரிச் கிரீன்ஃபீல்ட், "டர்னரில் சொத்துக்களில் வலுவான டிஜிட்டல் தளமான சிஎன்என் விற்கபடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details