பற்களின் முக்கியத்துவத்தை அனைவரும் நன்கு அறிந்திருக்க வேண்டும். எந்த வலி வேணாலும் வரலாம்... பல் வலி மட்டும் வரக்கூடாது என பலர் சொல்வார்கள்.
ஏனென்றால், பல் வலி நம்மை பாடாய்படுத்தி எடுத்துவிடும். வலி வந்த பிறகு பல் மருத்துவரை சந்திப்பதை விட, அவ்வப்போது சந்தித்து பற்கள் மற்றும் சுற்று பகுதிகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து கொள்வது அவசியம்.
ஆனால், தற்போது கரோனா காலக்கட்டத்தில் மருத்துவரை சந்திப்பது நல்லதா போன்ற பல்வேறு வகையான அச்சத்துடன் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு இதுதொடர்பாக தெளிவுபடுத்த பல் மருத்துவர் ஹிமாலி காமத் அணுகினோம்.
பற்களில் ஏற்படும் வலியை பலரால் எளிதில் கண்டறிய முடியாது. தலைவலியா, காது வலியா, பல் வலியா என்ற குழப்பத்திலே பலரும் இருப்பார்கள்.
பல்சுழற்சி மற்றும் பல் புண்கள் மிகவும் துன்பகரமானவை. அதே போல், பற்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்பட்டு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
இத்தகைய நிலைகளில் நிச்சயமாக மருத்துவரை சந்தித்தாக வேண்டும். பற்களில் ஏற்பட்ட ஒட்டைகளை அடைக்கவும், மஞ்சள் நிறத்தில் மாறியுள்ள பற்களை சுத்தம் செய்யவும், பல் விழுந்த இடத்தில் மாற்று பற்களை கட்டுவதற்கு மக்கள் பெரும்பாலானோர் வருவது வழக்கம்.
கரோனா காலத்தில் பல் மருத்துவரை நேரடியாக சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லதா என்ற கேள்வி பலரின் மனதில் ஓடுகிறது.
எளிதில் கரோனா பரவும் அபயம் உள்ளதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதற்காக பல் வலியை எளிதாகவும் நினைத்துவிட கூடாது. கரோனா காலத்தில் நோயாளிகளின் பாதுகாப்புக்காக பல் மருத்துவனையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நோயாளிக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பு, எதேனும் அறிகுறிகள் உள்ளதாக என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காத்திருக்கும் நேரம் அல்லது காத்திருப்பு அறையில் மற்றவர்களுடனான தொடர்பு குறைக்கப்படுகிறது.