தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காந்தியின் அகிம்சை நவீன இந்தியாவில் செல்லுபடியாகுமா? - Gandhi 150th Birthday

காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரக வழிகள் நவீன இந்தியாவில் செல்லுபடியாகுமா என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

Gandhi

By

Published : Sep 4, 2019, 1:27 PM IST

காந்தி தனது வாழ்நாள் முழுவதும் மைய விழுமியங்களாக உண்மையையும், அகிம்சையையும் கைக்கொண்டிருந்தார். தனது எதிர்ப்பாளர்களை வென்றெடுக்கும் சத்தியாகிரகப் போராட்டத்தின் ஆயுதமாக உண்மையையும், அகிம்சையையும் பயன்படுத்தினார்.

உலகின் பல்வேறு அமைப்புகள் தங்களின் லட்சியங்களில் வெற்றிபெற வன்முறையை முதலில் கையிலெடுத்தாலும், அகிம்சை முறையிலான பேச்சுவார்த்தையை இறுதியாகக் கையிலெடுப்பதேயே வழக்கமாகக் கொண்டுள்ளன.

காந்தியடிகள்

நாகலாந்து மாநிலத்தின் பூர்வகுடி குழுக்களான நாகா தேசிய கவுன்சில், நேஷனல் சோசியலிஸ்ட் கவுன்சில், நாகலாந்து பெடரல் ஆர்மி போன்றவை இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபட்டன. இந்திய ராணுவமும் இந்த குழுக்களும் மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் நேர்ந்தன. ஒருகட்டத்தில் இரு தரப்பும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்தியாவுடன் இணைந்து அமைதியுடன் வாழ நாகா பூர்வ குடிமக்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், இந்திய அரசும் அம்மக்களின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொண்டது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் கொரிய தீபகற்பத்தில் பெரும் பிளவு ஏற்பட்டது. இருதுருவங்களாக மாறி வடகொரியவும் தென் கொரியாவும் தொடர் போரில் ஈடுபட்டுவந்தன. இதில் தென்கொரிய அரசுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு களமிறங்கியதால், அமெரிக்காவுக்கு எதிராக அணுஆயுதப் போரில் ஈடுபடப்போவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்தார். யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம்மும் நண்பர்களாக மாறி போர் தவிர்க்கப்பட்டு அமைதி நிலவி வருகிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையை தற்போதும் கொதிநிலையே நிலவி வருகிறது. இருப்பினும், இரு நாடுகளும் நல்லிணக்கதை உருவாக்கும் முனைப்புடன் சீக்கியர்கள் வழிபடுவதற்கு கர்த்தார்பூர் பகுதியை பாகிஸ்தான் அரசு திறந்துவிட்டுள்ளது.

இந்திய விவசாயிகளின் நிலை கவலைக்குரியதாக இருப்பினும், அவர்கள் தங்களின் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தும் வழியாக அகிம்சை வழியிலான போராட்டங்களையே மேற்கொள்கின்றனர். மக்களால் மதிக்கப்படும் இந்தியாவின் முக்கிய களப்போராளிகளாகக் கருதப்படும் வினோபா பாவே, மேதா பட்கர், அன்னா ஹசாரே, ஐரோம் ஷர்மிளா உள்ளிட்டோர் காந்தியின் போராட்ட வழியான உண்ணாவிரதத்தையே பெரும்பாலும் மேற்கொள்கின்றனர்.

எதிரிகளை வீழ்த்த வன்முறையை கையில் எடுக்காமல், அகிம்சையே போதுமானது என காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க கருப்பினத் தலைவரான மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்துள்ளார். அகிம்சையைக் கடைபிடிப்பவர்கள் பழிக்குப்பழி வாங்காமல் வருந்தத் தயாராக இருக்க வேண்டும். அகிம்சை என்பது எதிரியைத் தாக்காமல் இருப்பது மட்டுமல்ல, அவர்களை வெறுக்காமல் இருப்பதுவும்தான் எனவும் மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்துள்ளார்.

காந்தி - மார்ட்டின் லூதர் கிங்

உம்கோன்டோ வி சிஷ்வே என்பது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆயுதப் படையாகும். இதன் துணைத் தலைவராக இருந்து தன் ஆரம்பக் கட்டத்தில் வன்முறையின் மேல் நம்பிக்கை வைத்திருந்த நெல்சன் மண்டேலா பிற்காலத்தில் காந்தியக் கொள்கைகள் மேல் ஆர்வம் கொண்டார். 27 ஆண்டுகள் சிறையிலிருந்து பின் தென்னாப்பிரிக்க அதிபராக பதவியேற்ற நெல்சன் மண்டேலா, கருப்பின மக்களுக்கு எதிராக வெள்ளையர்கள் செய்த குற்றங்களை மன்னித்தார்.

காசா நகரத்தில் அரசு அமைத்திருக்கும் ஹமாஸ் என்ற பாலஸ்தீன அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அறிவித்திருக்கின்றன. இதன் தலைவர் கலித் மாஷல் , "வலிமையற்றவர்களுக்கு எதிராக அதிகார வர்க்கம் இழைக்கும் அநீதியை எதிர்த்து போராடக் கற்றுக் கொடுத்தவர் காந்தி. எனவே, அவரும் எங்கள் தலைவர்தான்" என்றார்.

தங்களின் குறைகளை தெரிவிப்பதற்கு வெகுஜன மக்கள் தற்போது காந்தியின் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் அரசு அலுவலகங்களுக்கு வெளியே உட்கார்ந்து அமைதி வழியில் மக்கள் போராடி வருகின்றனர். சட்டரீதியான இந்த போராட்டங்களால், அரசு அலுவலர்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து அவர்களின் குறைகளைத் தீர்க்க முயற்சிக்கின்றனர். அகிம்சை, உண்மை ஆகியவை அடிப்படையில் ஜனநாயகத்தில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் யாவும் மனித சமுதாயத்திற்கு காந்தி வழங்கிய பங்களிப்புகளாகும். அண்ணலின் போராட்ட வழிமுறை காரணமாக ஜனநாயக கருத்தாக்கத்தில் எதிர்ப்பு ஒரு சாராம்சமாக மாறிவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details