கடந்த ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேறிய தேசிய குடியுரிமை மசோதா, மாநிலங்களவையில் அறிமுகம் செய்யாதால் நிறைவேற்றப்படவில்லை. தற்போது நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் எப்படியாவது அம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த மசோதாவை எதிர்த்து வரும் நிலையில் ’இரும்புப் பெண்’ இரோம் ஷர்மிளா மசோதா குறித்த தனது கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
’பொதுமக்களின் கருத்தை கேட்ட பின் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்’ - இரோம் ஷர்மிளா - இரோம் ஷர்மிளா செய்திகள்
இட்டாநகர்: பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பின் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்ற முடிவெடுக்க வேண்டும் என்று இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை நான் மிகக் கடுமையாக எதிர்க்கிறேன். மக்களவையில் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து இம்மசோதாவை எதிர்த்து வருகிறேன். இனிமேலும் நான் எதிர்ப்பேன். மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும். ஆனால் இதனைச் செய்யாமல் மத்திய அரசு மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டிவருவது கண்டனத்திற்குரியது” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'குடிமக்களின் தேசியப் பதிவு விவகாரத்தில் வெளிநபர்களை நம்ப வேண்டாம்' - வங்க மக்களுக்கு மம்தா கோரிக்கை