தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய வரலாற்றில் முதல்முறையாக பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் இழப்பீடு

டெல்லி: டெல்லி- லக்னோ இடையே ஓடும் தேஜஸ் விரைவு ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக சென்றதால் ரூ.1.62 லட்சத்தை 950 பயணிகளுக்கு இழப்பீடாக பிரித்து வழங்கவுள்ளது.

IRCTC to pay Rs 1.62 lakh compensation for late running of Tejas Express

By

Published : Oct 21, 2019, 7:15 PM IST

Updated : Oct 21, 2019, 7:23 PM IST

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் கடந்த 19ஆம் தேதி காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய தேஜஸ் விரைவு ரயில் 9.55 மணிக்கு புறப்பட்டு, டெல்லிக்கு மதியம் 12.25 மணிக்கு பதிலாக 3.40 மணியளவில் சென்றடைந்தது.

இதேபோன்று டெல்லியிலிருந்து 3.35 மணிக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு லக்னோ நகருக்கு இரவு 11.30 மணியளவில் சென்று சேர்ந்தது. அதாவது சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றது.

லக்னோ-டெல்லி பயணத்தில் 450 பயணிகள் இருந்தனர். டெல்லி- லக்னோ பயணத்தில் 500 பயணிகள் இருந்தனர். இவர்களுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.

அதாவது லக்னோ-டெல்லி வழித்தடத்தில் பயணித்த 450 பயணிகளுக்கு தலா ரூ.250 இழப்பீடாக வழங்கப்படுகிறது. டெல்லி-லக்னோ வழித்தடத்தில் பயணித்த 500 பயணிகளுக்கு இழப்பீடாக தலா ரூ.100 வழங்கப்படவுள்ளது.


இதையும் படிங்க: 'எதிர்பார்த்தது 640 கோடி, கிடைத்ததோ ரூ.72 ஆயிரம் கோடி'- ஐஆர்சிடிசி பங்குக்கு கடும் கிராக்
கி

Last Updated : Oct 21, 2019, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details