தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமெரிக்க விமான தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! - உச்சகட்ட பதற்றம் - iraq rocket attack US

பாக்தாத்: ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.

iraq rocket attack, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
Iraq rocket attack

By

Published : Jan 8, 2020, 8:10 AM IST

Updated : Jan 8, 2020, 9:13 AM IST

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க மேற்கொண்டு வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில்,ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள அன் அல்- அசாத் உள்ளிட்ட இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 10 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுலைமானியின் கொலைக்கு பழிவாங்கவே இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளதாக ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் மேற்கொண்டு ஏவுகணைத் தாக்குதல்

இதனை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் உறுதிசெய்துள்ளது. ஈராக்கின் இந்தப் பதிலடி தாக்குதல் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றநிலையை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:

காசிம் சுலைமானி இறுதி ஊர்வலம்: நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு!

Last Updated : Jan 8, 2020, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details