தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா வைரஸ்: ஈரானிலிருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம் - delhi news

ஈரானிலிருந்து இந்தியா்களை அழைத்து வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ்நெருக்கடி
கொரோனா வைரஸ் நெருக்கடி

By

Published : Mar 7, 2020, 8:33 AM IST

உலகின் அனைத்து மூலைகளிலும் கொரோனா நோய் தொற்று தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையின் மத்தியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 240 மாணவர்கள் உட்பட பல இந்தியர்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் சிக்கியுள்ளனர். அவர்களை விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையில், ஈரானும், இந்தியாவும் ஈடுபட்டுள்ளன.

முன்னதாக, சொந்த நாட்டிற்கு திரும்புவதற்குள் இந்தியர்களை பரிசோதிக்க ஈரான் அரசு ஒப்புக் கொண்டிருந்தது. இந்த பரிசோதனைக்காக, இந்திய மருத்துவ ஆய்வு மன்றம், மத்திய சுகாதார அமைச்சகம் இணைந்து உருவான ஆறு பேர் கொண்ட குழு, ஈரானில் தரையிறங்கியுள்ளது. ஆதரவின்றி தவிக்கும் இந்தியர்களை மீண்டும் சொந்த நாட்டிற்கு கொண்டு சேர்க்க, முன்பரிசோதனை நடத்த ஒரு முகாமை அமைத்துள்ளது.

முதல் கட்டமாக, இந்தியர்கள் பயன்படுத்திய துணிகளின் மாதிரிகள் மருத்துவப் பரிசோதனை செய்யப்படவுள்ளன. ஈரானிலிருந்து இம்மாதிரிகள் டெல்லிக்கு விமானம் மூலமாக கொண்டு வரப்படும். பின்னர் முறையான ஆய்வுக்குட்படுத்தப்படும். இந்த ஆய்வில் கொரோனா(கோவிட்-19)க்கு, சாதகமில்லாத முடிவுகள் வந்தால், ஈரானிலிருக்கும் இந்தியர்கள் இங்கு அழைத்து வரப்படுவார்கள்.

ஒருவேளை, இந்த ஆய்வில் ஈரானிலிருக்கும் இந்தியர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அந்நபர்கள் ஈரானில் தங்க வைக்கப்படுவார்கள். ஈரான் சுகாதார அமைச்சகத்தின் சிறந்த மருத்துவ வசதிகள் கொண்ட முகாமில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பிப்ரவரி 25 வரையிலும் ஈரானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் விமான சேவை இருந்தது. ஆனால், பிப்.,26 அன்று அந்நிலை மாறியது. கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இருநாடுகளுக்கிடையிலும் விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இருநாட்டிலிலும் சொந்த நாட்டிற்கு வர முடியாமல் தவிக்கும் குடிமக்களை மனிதாபிமான அடிப்படையில், அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஈரானிய அரசு மேற்கொண்டது. இதற்காக, சில விமானங்களையும் தயார்நிலையில் வைத்துள்ளது. இந்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அவை செயல்பாட்டிற்கு வரும்” என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானிலிருந்து டெல்லிக்கு வரும் விமானத்தில், இந்தியாவிலிருக்கும் ஈரானியர்கள் திருப்பி அனுப்பப்படுவர். இதற்கிடையில், நாடு திரும்புவர்களுக்கு வசதியாக டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் போதுமான எண்ணிக்கையில் சிறப்பு விமானங்களை இயக்கவும் ஏற்பாடு செய்யவும் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே, தற்காலிகமான இந்த போக்குவரத்து தடை எவ்விதத்திலும் நாட்டிற்கிடையிலுள்ள நெருக்கமான தொடர்பை பாதிக்காது. கடுமையான சூழலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள், வியாபாரிகள் ஆகியோரை மீட்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதில் மட்டும்தான் இருநாடுகளும் கவனம் செலுத்தும். கொரோனாவால் பாதிப்படைந்த இந்திய மக்களை நாடு கடத்துவதாக வெளிவந்த தகவல்களில் உண்மையில்லை. அதற்கு எவ்வித ஆதாரமுமில்லை, என ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து ஈரானின் அதிஉயர் தலைவரான ஆயதுல்லாஹ் காமினி, ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹம்மது ஜாவத் சரீஃப் ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர். அதில், இந்தியாவில் ‘முஸ்லிம்கள் படுகொலை' நடைபெறுகிறது எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்தை முழுமையாக மறுக்கும் டெல்லி அரசு, அதுகுறித்து பேச ஈரானிய தூதருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details