13 வது ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு பெங்களூருவில் சூதாட்டத்தில் ஈடுபவர்களை கண்காணிக்க ஒரு தனி குழுவை அமைக்கப்பட்டது. பெங்களூரு காவல்துறையினர் நகரத்தில் ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுகிறதா என்று தீவிரமாக கவனித்துவந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: பெங்களூருவில் 42 பேர் கைது, ரூ.1.54 கோடி பறிமுதல் - கிரிக்கெட் பந்தயம்
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு காவல்துறையினர், 42 பேரை கைது செய்துள்ளனர். மேலும், 1.54 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சிசிபி கமிஷனர் சந்தீப் பெயில் தலைமையிலான குழு மேற்கொண்ட கடுமையாக நடவடிக்கையின் காரணமாக ஐபிஎல்லின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரூ.1 கோடி 54 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரும்பாலான கிரிக்கெட் பந்தய நடவடிக்கைகள் ஆன்லைனில் செய்யப்படுகின்றன, எனவே ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபவர்களை பிடிக்க சிசிபி சைபர் விங் காவல்துறையினரின் உதவியை நாடியது.
சிசிபியின் கூற்றுப்படி, பெங்களூரு நகரில் பெரும்பாலான இடங்களில் நேருக்கு நேர் பந்தயம் கட்டி சூதாட்டில் ஈடுபட்டனர். சில இடங்களில் செயலிகள் மூலம் பந்தயம்கட்டி அதிலிருந்து வெற்றியாளருக்கு தரவரிசை அடிப்படையில் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.