தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு எம்பி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் - MP MLA Special Court from CBI Court

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம், தற்போது சிவகங்கை எம்.பி.,யானதால், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

inx karthick chidambaram

By

Published : May 30, 2019, 5:51 PM IST

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா படுதோல்வி அடைந்தார். கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்ஸில் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் மக்களவை உறுப்பினராகியுள்ளதால், சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, எம்பிக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details