காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு மீதான முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து சிபிஐ உடனே அவ்வழக்கில் அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டது.
ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு! - P Chidambaram anticipatory bail
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிபிஐ அவரது இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப.சிதம்பரம்
நேற்று ப.சிதம்பரத்தை விசாரிப்பதற்கு, சிபிஐ அவர் வீட்டிற்கு சென்றுள்ளது. அங்கு அவர் இல்லாததால், அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்குள் ஆஜராகும்படி, அவர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கபில் சிபில் தலைமையிலான ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் குழு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவிற்கான விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.