தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுப்பு! - delhi high court

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

denied prebail

By

Published : Aug 20, 2019, 5:47 PM IST

Updated : Aug 20, 2019, 9:21 PM IST

2004 - 2009ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மோசடி செய்தது, சட்டவிரோதமாக பணம் பெற்றது, அரசு ஊழியர்களை தவறாக பயன்படுத்தியது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், இந்திராணி ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவாகியது. இதனால் ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தன்னை கைது செய்யக்கூடாது என்று மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரனை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் பதிவு
Last Updated : Aug 20, 2019, 9:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details