ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி மத்திய முன்னாள்நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை அவரது வீட்டில் வைத்து சிபிஐ அலுவலர்கள் கைது செய்தனர்.
ப. சிதம்பரம் பிணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு!
டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணைக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று ப. சிதம்பரம் தரப்பிலிருந்து சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணைக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திகார் சிறையில் அவர் காவலில் வரும் 19ஆம் தேதிவரை இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.