ப.சிதம்பரம்
மொரிஷியஸ் நாட்டில் உள்ள மூன்று நிறுவனங்களில் இருந்து ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ரூ.315 கோடி வெளிநாட்டு நிதி பெறப்பட்டது. அப்போது முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஷீனா போரா, ஏற்கனவே கொலை வழக்கில் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சாட்சியாக (அப்ரூவர்) மாறிவிட்டார். இதையடுத்து ப.சிதம்பரத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.
திகார் சிறை
இதற்கிடையில் அவருக்கு நீதிமன்றம் முன்பிணை மறுத்தது. இந்த நிலையில் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அலுவலர்கள் 71 பேர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தேர்ந்தெடுத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது ,
அலுவலர்கள் கேள்வி
தேசத்தின் நலனுக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்தவர்கள், சிறுமைக்குள்ளாக்கப்படுகின்றனர். ஆனால் மிகப்பெரும் குற்றம் செய்தவர்கள், குற்றஞ்சாட்டுக்குள்ளானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. அவர்களுக்கு எதிராக ஆளும் தரப்பு என்ன நடவடிக்கை எடுத்தது? உண்மையில் இது பரிதாபத்துக்குரியது.
முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு திட்டத்தையும், ஆராய்ந்து செயலாக்குவதற்கு முன்னாள் அரசு ஊழியர்கள் தள்ளிப்போடுவதில் தவறு இல்லை. அக்கறையுள்ள மற்றும் நேர்மையான அலுவலர்கள், அன்றைய அரசின் கொள்கை திட்டத்தை செயலாக்கியதை தவிர எவ்வித தவறும் செய்யவில்லை. இதற்கு தண்டனையென்றால், சேவை செய்யும் அலுவலர்கள் இயல்பாகவே சீரழிக்கப்படுவார்கள்.
நீதியை உரிய நேரத்தில், அமல்படுத்துவது அரசின் நோக்கமாகும். அதனை தாமதிக்கக் கூடாது. மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய நான்கு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
குடியுரிமை அதிகாரிகள்
இந்த கடிதத்தில் முன்னாள் அரசில் அதிகாரத்துவமிக்க குடியுரிமை பணிகளில் இருந்த, முன்னாள் அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர், முன்னாள் வெளியுறவுச் செயலாளர், பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங் மற்றும் முன்னாள் பஞ்சாப் காவல் துறை தலைவர் (டிஜிபி) ஜூலியோ ரிபேரோ ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆண்டு நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) சிந்துஸ்ரீ குலால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முன்னதாக, அவர் மீது வழக்கு தொடர மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.