இந்திய பொருளாதாரத்தை பாதித்த இரண்டு முக்கிய விஷயங்களான நுகர்வு (பயன்பாடு) மற்றும் முதலீடு மந்த நிலை. 2012-14ஆம் ஆண்டில் 66.2 சதவீதமாக இருந்த தனியார் பங்கு 2015-19 ஆம் ஆண்டில் 57.5 ஆக சரிந்தது. முதலீட்டு வீதம் 32.3 சதவீதமாக சரிந்த அதே வேளையில் , வளர்ச்சி விகிதம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவிலும் சரிந்தது. இந்த விகிதங்கள் வரவிருக்கும் நெருக்கடியின் பிரதிபலிப்பாகும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு, அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் பலவீனமான கிராமப்புற பொருளாதாரம் ஆகியவை இதற்கான காரணங்கள். இத்தகைய மோசமான காலங்களில் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான சலுகைகளையும் அறிவித்தது. பெருநிறுவனங்களின் (கார்ப்பரேட் வரி) வரியை முந்தைய 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைப்பது, கட்டுமானங்களுக்கான கடன்களை அதிகரிப்பது போன்ற சில சலுகைகள் இதில் அடங்கும்.
வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கான நிதியை ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கை ஒரு முக்கியமான சலுகையாகும். பட்ஜெட் கூட்டத்தொடரில் அடிப்படை உள்கட்டமைப்பு துறையில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது .
ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்யப்படும் உண்மையான தொகை மத்திய நிதி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் தீர்மானிக்கப்படும். இத்தகைய பெரிய முதலீடு உள்கட்டமைப்பு துறையில் ஒரு மாற்றத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த முதலீடுகளில் வருமானத்தை உருவாக்கி பொருளாதாரத்தை பலப்படுத்தும். இதன் விளைவாக, பணப்புழக்கம் அதிகரிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியை மெச்சத்தக்க அளவில் அடைவதற்கும் அதை தொடர்ந்து பராமரிப்பதற்கும், திட்டங்களை காகிதங்களில் அடைப்பதற்கு பதிலாக திறம்பட செயல்படுத்த வேண்டும். ஒரு நாட்டின் மனித வளமும் பொருளாதார வளர்ச்சியும் சமூக மற்றும் செயல்பாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் அது அடைந்த முன்னேற்றத்துடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு உற்பத்திக்கு தரமான உள்கட்டமைப்பு முக்கியமானது என்றால், மனிதவளத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக உள்கட்டமைப்பு முக்கியமானது. தரமான கல்வி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை நிலைமைகள் மட்டுமே மனித வளத்தின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். பட்ஜெட்டில் குறைந்தது 6 சதவீதத்தை கல்வியில் முதலீடு செய்யுமாறு பல நிறுவனங்கள் அரசாங்கங்களை வலியுறுத்திய போதிலும், 4.6 சதவீதமாக ஆக அது வரையறுக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச சராசரியை விட குறைவாக உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 1.5 சதவீதத்தை மட்டுமே சுகாதாரத்துக்காக செலவிடுகிறது. அமெரிக்கா சுமார் 18 சதவீதத்தை செலவிடுகிறது. இதன் விளைவாக, இந்தியர்கள் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
1991ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு, நாட்டில் நிதி ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில், 1993-94 முதல் ஏற்றத்தாழ்வு குறியீட்டில் அசாதாரண உயர்வு இருப்பதாகக் கூறப்பட்டது.