தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: ஒரே வீட்டில் தங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 25 பேரிடம் விசாரணை

திருப்பத்தூர்: ஒரே வீட்டில் தங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 25 பேரிடம் சுகாதாரத் துறையினரும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டனர்.

ஒரே வீட்டில் தங்கியிருந்த 25 வடமாநிலத்தாரிடம் விசாரணை
ஒரே வீட்டில் தங்கியிருந்த 25 வடமாநிலத்தாரிடம் விசாரணை

By

Published : Mar 24, 2020, 1:43 PM IST

திருப்பத்தூர் சேண்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று மாலை லாரி மூலமாக வடமாநிலத்தவர் 20-க்கும் மேற்பட்டோர் வந்து ஒரே இடத்தில் தங்கியிருப்பதாகத் தகவல் வந்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வேலூர் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் வடமாநிலத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஒரே வீட்டில் தங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 25 பேர்

இந்த விசாரணையில் அவர்கள் 25 பேரும், தமிழ்நாடு முழுவதிலும் மெத்தையுறை, தலையணையுறை போன்றவற்றை விற்பனை செய்யவந்தவர்கள் என்பதும், ரயில் சேவை நிறுத்தப்பட்டதையடுத்து, மதுரை, மயிலாடுதுறை போன்ற பகுதியிலிருந்து வேலூர் சேண்பாக்கம் பகுதிக்கு வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களுக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அங்கேயே தங்க அனுமதிக்கப்பட்டனர்.

வெளிமாநிலத்தைச் சேர்ந்த 25 நபர்கள் திடீரென தங்கள் பகுதிக்கு வந்ததால், சந்தேகத்தின்பேரில் அப்பகுதி மக்கள் மாவட்ட கரோனா வைரஸ் தடுப்புக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அப்பகுதியினரின் இந்தச் செயலினை காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும் பாராட்டினர்.

இதையும் படிங்க: காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details