தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக எல்எல்ஏ சி.டி விவகாரம் குறித்து விசாரணை வேண்டும்: சித்தராமையா

பெங்களூரு: பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யட்னல் எழுப்பிய சிடி வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா
கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா

By

Published : Jan 16, 2021, 11:00 PM IST

பெங்களூரு சிவானந்தா வட்டம் அருகே உள்ள தனது அரசு இல்லத்தில் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "பாஜக மூத்த எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யட்னல் ஒரு சிடி வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அது என்ன சிடி என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிடி வழக்கு குறித்து முழு விசாரணை இருக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.க்களுக்கு மானியம் கேட்கவும் பெறவும் உரிமை உண்டு. ஜமீர் அகமது போன்ற சில எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இதுபோன்ற மானியப்பணம் வழங்குவது முறையற்றது. ஒவ்வொரு எம்.எல்.ஏ-வும் தங்கள் தொகுதிக்கு மானியம்கோரி கடிதங்களை எழுத அதிகாரம் பெற்றவர்கள்.

ஆப்ரேஷன் கமலா நடந்து என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக அமைச்சர் ரமேஷ் ஜராகிஹோலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்மூலம், ஆப்ரேஷன் கமலா நடந்தது என்பது நிரூபணமாகிறது. இது குறித்து தெளிவான, துல்லியமான விசாரணை நடத்த வேண்டும்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 17 பேர் தாமாக முன்வந்து பாஜகவில் இணைந்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details