தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்ரம்ப் வருகை குறித்து பேசும் அமெரிக்க முன்னாள் தூதர் அருண்சிங் - பிரத்யேக பேட்டி - Interview on Aruning Trump's Former US Ambassador

ட்ரம்ப்பின் இந்திய சுற்றுப்பயணம் அவருக்கு அமெரிக்காவில் அவருடைய செல்வாக்கு அதிகரிக்க, ஒரு வாய்ப்பாக அமையும். அதோடு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் ட்ரம்ப்புக்கு ஆதாயத்தைத் தரும் என்று அமெரிக்காவின் முன்னாள் இந்திய தூதரான அருண்சிங் நம்புகிறார். மூத்தப் பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா, இந்தத் தருணத்தில் ட்ரம்ப்பின் இந்திய பயணம் பற்றியும் இருதரப்பு உறவுகள், வர்த்தக ஒப்பந்தங்கள், காஷ்மீர் விவகாரம் , குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, அமெரிக்க காங்கிரஸ் பற்றி அமெரிக்க முன்னாள் தூதர் அருண் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் தூதர் அருண்சிங் ட்ரம்ப் வருகை குறித்த பேட்டி.! அமெரிக்க முன்னாள் தூதர் அருண்சிங் பேட்டி அருண்சிங் பேட்டி Arun Singh Interview Trump Modi ETV Bharat Interview on Aruning Trump's Former US Ambassador Interview with Arun Singh, former US Ambassador
Arun Singh Interview

By

Published : Feb 24, 2020, 10:30 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24,25ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, நடந்த 'ஹவ்டி மோடி' போன்ற நிகழ்ச்சி அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தால் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ட்ரம்ப் மீதான அமெரிக்க உரிமை மீறல் தீர்மானம் செனட் சபையில் தோல்வியடைந்த, சில நாள்களில் அவரின் இந்திய சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ட்ரம்ப்பின் இந்திய சுற்றுப்பயணம் அவருக்கு அமெரிக்காவில் அவருடைய செல்வாக்கு அதிகரிக்க, ஒரு வாய்ப்பாக அமையும். அதோடு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் ட்ரம்ப்புக்கு ஆதாயத்தைத் தரும் என்று அமெரிக்காவின் முன்னாள் இந்திய தூதரான அருண்சிங் நம்புகிறார். மூத்தப் பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா, இந்தத் தருணத்தில் ட்ரம்ப்பின் இந்திய பயணம் பற்றியும் இருதரப்பு உறவுகள், வர்த்தக ஒப்பந்தங்கள், காஷ்மீர் விவகாரம் , குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, அமெரிக்க காங்கிரஸ் பற்றி அமெரிக்க முன்னாள் தூதர்அருண் சிங்கிடம் பேட்டி எடுத்தார். பேட்டி பின்வருமாறு:


கேள்வி: அமெரிக்க அதிபராக முதன்முறையாக பதவியேற்ற ட்ரம்ப் தனது பதவி முடியும் காலமான நான்காவது ஆண்டில் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , அவர் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ட்ரம்ப்பின் இந்திய வருகை பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மக்கள் ட்ரம்ப் வருகை குறித்து பேசுகிறார்கள். அரசியல் வியூகர்கள், இரு நாட்டு உறவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமாகவே இதைப் பார்க்க வேண்டும். 40 லட்சம் அமெரிக்க இந்தியர்கள் அங்கே இருக்கிறார்கள். 2,00,000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள்.

அமெரிக்காவுக்கு வேலைவாய்ப்பு தேடி ஏராளமான இந்தியர்கள் செல்கிறார்கள். வேலைவாய்ப்புகள் இந்தியாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலமாக உள்ளது. இந்தியா, அமெரிக்க நாடுகளுக்கிடையேயான இத்தகையை உறவு இன்னும் வலுப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில், ட்ரம்ப்பின் வருகை முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், அடிக்கடி நடைபெறும் உயர்மட்டச் சந்திப்புகள் இருதரப்பு உறவுகளைப் பராமரிக்க உதவிகரமாக இருக்கும். அமெரிக்க அதிபராக கிளின்டன் பதவியேற்றது முதல் ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் இந்தியா வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கேள்வி: பராக் ஒபாமா இந்தியாவுக்கு இரு முறை வருகை தந்துள்ளாரே?

ஒபாமா இரு முறை வந்துள்ளார். முதல் முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, அவர் இந்தியா வந்தார். கிளிண்டன் வருகையைப் பார்த்தோமானால் அவர் இரண்டாம் முறை அமெரிக்க அதிபராகப் பதவிவகித்தபோது, அவரின் பதவி காலம் முடியும் தருவாயில் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ட்ரம்ப் தன் பதவி முடியும் காலத்தில் இந்தியா வருவது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவுடனான உறவுக்கு அவர் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுப்பதையே இது காட்டுகிறது. இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான உறவுக்காக மட்டும், அவர் இந்தப் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. அரசியல் ஆதாயத்துடன்தான் இந்தியாவுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது ' ட்ரம்ப் பிராண்ட் அரசியல்' ஆகும்.


கேள்வி: அமெரிக்காவில் உரிமை மீறல் பிரச்னையிலிருந்து ட்ரம்ப் வெளியேவந்துவிட்டார். உள்நாட்டில் அவருக்குக் கிடைத்த வெற்றியை சர்வதேச அரங்குக்கு உணர்த்தும் வகையிலும் தன் செல்வாக்கைச் சர்வதேச அளவில் உயர்த்திக் கொள்ளும் வகையிலும் அவர் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறாரா?

நிச்சயமாக. அமெரிக்க செனட் சபையில் பிப்ரவரி 5ஆம் தேதி ட்ரம்ப் மீதான உரிமை மீறல் தீர்மானம் தோல்வியடைந்தது. பிப்ரவரி 4ஆம் தேதிஸ்டேட் ஆஃப் யூனியன் அவையில் ட்ரம்ப் உரை நிகழ்த்தினார். இந்த உரை அவருக்கு நல்ல பலனைத் தந்தது. தன் உரையின்போது, ஆப்பிரிக்க-அமெரிக்க சமூகம் மற்றும் ஹிஸ்பானிக் சமூகத்தின் உறவு குறித்தும் பேசினார். உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டுமென்பதை அவர் உணர்ந்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது. இப்போதோ, சில நாடுகளில் மட்டுமே அவரின் வருகைக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி : இதனால்தான் லட்சக்கணக்கான இந்தியர்கள் தன்னை வரவேற்க காத்துக் கொண்டுள்ளனர் என்று ட்ரம்ப் குறிப்பிட்டாரா?

மிகச் சரி. அகமதாபாத் தெருக்களிலும் பிரமாண்டமான ஸ்டேடியத்திலும் ட்ரம்பை வரவேற்க இந்தியர்கள் திரளவுள்ளனர். டெல்லியில் அவருக்கு அரசியல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படலாம். ஏனெனில், பல நாடுகள் தங்கள் மீது அவர் கொண்டுள்ள கண்ணோட்டங்கள், தங்கள் நட்பு நாடுகள் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கைகள், உறுதிகொடுத்துவிட்டு உதவி செய்யாததைக் கவனத்தில் கொள்கின்றன. சிரியா குறித்த அவரின் கண்ணோட்டம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடனான உறவுகள் குறித்து அந்தந்த நாடுகள் கவனத்தில் கொள்கின்றன.

அந்த உறவுகள் குறித்தும் கவலைகள் உள்ளன. ஆனால், பல நாடுகளுடன் அவர் நல்ல உறவுநிலையைப் பேணி வருவதாக ட்ரம்ப் நினைக்கலாம். சமீபத்தில் , ஈகுவடார் நாட்டு ஜனாதிபதியை ட்ரம்ப் வரவேற்றபோது, இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அதனால், இந்திய வருகையின்போது ட்ரம்ப்புக்கு கிடைக்கும் பிரமாண்ட வரவேற்பு அவருக்கு உதவக் கூடும்.

கேள்வி: பிரதமர் மோடி optics ல் ஆர்வம் காட்டுகிறார்... அதனால் இரு நாட்டுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதா?

சர்வதேச உறவு நிலை வலுப்பட optics (ஒரு நிகழ்வு அல்லது நடவடிக்கையின் போக்கை பொதுமக்கள் உணரக்கூடிய வழி) மிக முக்கியமானது. இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதிக்கட்ட நிலையை அடைய வாய்ப்புள்ளது. இது இரு நாட்டு உறவுகள் இன்னும் வலுப்படுவதற்கான சமிக்ஞைதான். இரு நாடுகளும் கொண்டிருக்கும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில்தான் வர்த்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

நம்பிக்கையில்லாதவர்களிடத்தில் நாம் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ள மாட்டோம். பாதுகாப்புத் துறையைத் தாண்டி, வர்த்தக மற்றும் பொருளாதார உறவும் வலுப்பட வேண்டும். சமீபத்தில், இந்தியாவுக்காக அமெரிக்க தூதர் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு 160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் ஒவ்வோரு ஆண்டும் பெருகி வந்திருப்பது தெரிகிறது.

இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா மாறியுள்ளது. பொதுவாகவே, இந்தியா வர்த்தகப் பற்றாக்குறை கொண்ட நாடு. ஆனால், அமெரிக்காவுடன் மட்டும் வர்த்தகம் அளவில்லாமல் செய்கிறது. கடந்த செப்டம்பர் முதல் இரு நாடுகளும் வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்ளவிருப்பதாகப் பேசப்படுகிறது. இப்போது பிப்ரவரி மாதம் வந்து விட்டது. ஆனால், இன்னும் அவை நடக்கவில்லை. இருதரப்பு நலன்களையும் இந்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சில சமயங்களில் சமரசத்தை எட்டுவது எளிதான விஷயம் இல்லை. ஆனால், அதற்கு உறுதியான முயற்சி மேற்கொள்தல் வேண்டும்.

கேள்வி: வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படவில்லையெனில் வருந்தக் கூடிய விஷயமா... அது குறித்து கவலை கொள்ளலாமா?

கவலை கொள்ளுமளவுக்கு நான் எதையும் கருதவில்லை. இரு தரப்பிலுமே வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஆர்வம் காட்டப்படுகிறது. இரு தரப்பும் இணைந்து அதிகமாகச் செயல்பட வேண்டிய அவசியமிருக்கிறது. வரையறுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் உறவுக்கு நல்லது. வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்டால்தான், மீண்டும் தாயகம் திரும்பும் ட்ரம்ப் , ”நான் மெக்ஸிகோ, கனடா, தென்கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளேன்” என்று சொல்லமுடியும். அமெரிக்க தொழிலாளர்களுக்காகப் பல தரப்பிலும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார் என்று ட்ரம்ப் காட்டிக்கொள்ள முடியும்.

இந்தியாவின் இடத்திலிருந்து யோசித்தால், வர்த்தகம், முதலீடுகளைத் தாண்டி, அமெரிக்காவுடன் புதிய பல தரப்புகளிலும் ஆழமான உறவுகளைப் பேண விரும்புகிறது. இந்திய அலுவலர்கள் அமெரிக்காவுடன் ஆற்றல் துறையில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்போது இந்தியாவும் அமெரிக்காவும் எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் இணைந்து பணியாற்றுகின்றன. இதற்கு முன் இந்தத் துறையில் இணைந்து பணியாற்றியதில்லை. அதேபோல், இந்தியா அதிகளவில் விமானங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.

அதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் இணைந்து இரு நாடுகளும் பணியாற்றலாம். பெரும்பாலான விமானங்களை இந்தியா அமெரிக்காவிடமிருந்துதான் வாங்குகிறது. இதனால், வர்த்தகத் துறையில் உள்ள தடைகள் அனைத்தும் அடையாளம் காணப்பட வேண்டும். இவற்றைத் தாண்டி தொழில்நுட்பத் துறையில் புதிய உறவு எழ வேண்டும்.

நம்மிடத்தில் 5 ஜி, ஏர் இந்தியா, அதிகளவிலான கணிணி பயன்பாடு, புதிய வகையிலான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், உயிரியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் ஏற்பட வேண்டும். நம் வாழ்க்கை முறை, வேலை பார்க்கும் முறைகளில் முற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்தியா, அமெரிக்காவிடையே புதிய புதிய விஷயங்களில் உறவுகளை மேம்படுத்துவது, உறவு முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதும் முக்கியமானது ஆகும்.

கேள்வி : புள்ளியில் தரவுகள் பரவல் ஒரு பிரச்னையாக இருக்குமா?
இது சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் விஷயம் ஆகும். உருவாகியுள்ள புதிய தொழில்நுட்பங்கள் சமூகத்துக்குச் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றை ஒழுங்குப்படுத்துவதும் கடும் சவாலானது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் இது சவால் மிகுந்ததுதான். ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் தரவுகள் தனிநபர் உரிமை சார்ந்த விஷயம். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரான்ஸ் அதிக வரி விதிப்பது அமெரிக்காவைக் கவலையடையச் செய்துள்ளது. சமீபத்தில் சீனா 150 மில்லியன் அமெரிக்கர்கள் குறித்த புள்ளி விவரங்களை ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்து திருடியாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன ராணுவத்தைச் சேர்ந்த நான்கு பேர் இந்தக் காரியத்தைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தரவுகள் குறித்த பிரச்னை, தரவுகளைச் சேமித்து வைப்பது, வர்த்தகத்தில் தனிநபர்களுக்கு உள்ள உறவு குறித்த தரவுகள், அரசு, வர்த்தகம், தனிநபர் ஆகியோர்களுக்கிடையேயான உறவுகள் இவையெல்லாம் சர்வதேச அளவில் விவாதிக்கக் கூடிய விஷயங்கள். புதிய தொழில்நுட்பங்கள் சவால்களை கொடுத்தாலும் அவற்றை ஒழுங்குப்படுத்துவதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.


காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். ட்ரம்ப்புக்கு நெருக்கமாக செனட்டரான லிண்ட்ஸே கிரஹாம் உள்பட நான்கு செனட்டர்கள் தங்கள் அரசுச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் காஷ்மீரில் இணையத் தடையை நீக்க வேண்டும், வீட்டுக் காவலில் உள்ள காஷ்மீர் அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும், சிஏஏ, என்ஆர்சி ஆகியவை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கேள்வி: அமெரிக்க அதிபருடனான மோடி சந்திப்பின் போது, இந்த விவகாரங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறும்?

முதல் ஒன்று அமெரிக்க அதிபரின் பார்வை. அடுத்தது அமெரிக்க காங்கிரஸில் நடப்பது தொடர்பானது. கடந்த மூன்று ஆண்டுகளில் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் நடக்கும் விஷயங்களை எளிதாகக் கணித்துவிட முடியாது. தற்போதைய, அமெரிக்க ராஜதந்திரம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை விதிகளுக்கு முரணானது. கடந்த ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, ட்ரம்ப் சந்தித்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.

அதற்குப் பிறகு, இந்திய பிரதமர் கேட்டுக்கொண்டது போல காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் சொன்னார். இந்திய பிரதமர் மோடி ஒரு காலத்திலும் இப்படி ஒரு கோரிக்கையை அமெரிக்க அதிபரிடம் வைத்திருக்க மாட்டார். ட்ரம்ப்பே முன்வந்து தானாகவே இதைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை ட்ரம்ப்பின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தது. பின்னர், இந்தியா - பாகிஸ்தானிடையே சமரசம் செய்துவைக்க தான் விரும்பியதாகவும் அதனால் அப்படிச் சொன்னதாகவும் தெரிவித்தார்.

தலிபான்களுடன் ஒருவித சமரசத்துக்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்துகொண்டிருக்கும் விஷயங்களில் பாகிஸ்தானின் ஆதரவைப் பெறுவதற்காக, இவ்வாறான கட்டாயத்தை ட்ரம்ப் உருவாக்கினார். செப்டம்பர் மாதத்தில் ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்றார். பின்னர், நியூயார்க்கில் இம்ரான் கானுடன் பாகிஸ்தான் அரசு தீவிரவாதக் குழுக்களுடன் கொண்டிருக்கும் உறவுகள் குறித்து விவாதித்தார். திடீரென்று, ஈரான் மீது கவனம் செலுத்திவருவதாகச் சொன்னார்.

பாகிஸ்தான் அரசு தீவிரவாதக் குழுக்களுடன் அரசுசாராத உறவுகளை வைத்திருப்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். அதேபோல், எந்தச் சூழலிலும் காஷ்மீர் விவாகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது என்பதையும் புரிந்து வைத்துள்ளனர். அதனால், எதையாவது சொல்லி பாகிஸ்தானை தங்கள் பக்கம் வைத்திருப்பதை அவர்கள் விரும்புகின்றனர். அமெரிக்க காங்கிரஸை எடுத்துக் கொண்டால், நிர்வாகத்தில் அவர்கள் வித்தியாசமான முறையில் செயல்படுகிறார்கள். அவர்கள் அரசாங்கத்துக்கு இணையாகத் தங்களைக் கருதுகிறார்கள்.

அமெரிக்க காங்கிரஸில் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் குறித்த தீர்மானம் ஜனநாயக கட்சி ஆதரவுடன் கொண்டு வரப்பட்டது. இந்திய உறவை விரும்பாத இந்தியாவுக்கு எதிரான அபிப்ராயம் கொண்டுள்ளதால் மட்டும் அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விடவில்லை. காஷ்மீர், சிஏஏ, என்ஆர்சி ஆகியவை குறித்த விவகாரங்களில் அவர்களுக்கு என்று தனி நிலைப்பாடு உள்ளது. அதன்படியே, இந்த நான்கு செனட்டர்களும் அதைச் செய்துள்ளனர். இந்த விவகாரங்கள் உணர்வுப்பூர்வமானவை என்று தங்கள் அரசியல் பார்வையில் அவர்கள் நினைக்கின்றனர்.

இந்தியா தங்கள் கண்ணோட்டத்திலிருந்து இவற்றை எதிர்கெள்ள வேண்டும். இந்தியா நல்ல நிர்வாகத்துடன் இதை அணுக வேண்டும். இந்தியாவும் அமெரிக்க காங்கிரஸை அணுக வேண்டும். இதில் ஒரு விஷயம் முக்கியமானது. 2000ஆம் ஆண்டில் இருந்தே, இந்தியாவுக்கு ஆதரவளிப்பதில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் செனட்டர்கள் பிரிந்தே இருக்கின்றனர். முன்னதாக, இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதிலும் இதே நிலைப்பாட்டை செனட்டர்கள் கொண்டிருந்தனர்.

இந்திய பிரதமர் மோடிக்கும் ட்ரம்ப்புக்கும் உள்ள உறவை ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி செனட்டர்கள் எதிரெதிராகவே பார்க்கின்றனர். அதனால், இந்திய அரசின் நிலைப்பாட்டை மிகவும் மோசமானதாகவே அவர்கள் கருதுகின்றனர். இந்தியா இந்த நிலையை கவனமாகக் கையாள்வதோடு, அமெரிக்க காங்கிரஸை அணுகும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி: ஹவ்டி மோடி நிகழ்ச்சியின்போது குடியரசு கட்சி, ட்ரம்ப் மீண்டும் தேர்தலில் நிற்பதை பறைசாற்றியது.தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பற்கு சில மாதங்களுக்கு முன்னால் கெம் சோ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்க காங்கிரஸின் இந்த பிரிவினைவாத ஆதரவு இந்தியர்களைப் பாதிக்காதா?

அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும் இந்தியா அவர்களுக்கு ஆதரவளிக்கும். இதற்கு முன் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் போன்றவர்களுக்கு இந்தியா ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. 2008ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இரண்டாவது முறை பதவிக்காலம் முடியும்போது, இந்திய பிரதமர் அவரைச் சந்தித்தார். அப்போது ஜார்ஜ் புஷ் அமெரிக்கா, சர்வதேச நாடுகளில் அவ்வளவாக பிரபலமடைந்திருக்கவில்லை. அவரிடத்தில் இந்திய பிரதமர், ”உங்களை இந்திய மக்கள் ஆழமாக நேசிக்கிறார்கள்” என்று கூறினார்.

அமெரிக்க காங்கிரஸ் ஒபாமாவிடம் விரோதம் பாராட்டியபோது, கூட இந்தியா அவரிடத்தில் நட்பு பாராட்டியது. ஆனால், அதே வேளையில் அமெரிக்க காங்கிரஸ் அந்த நாட்டு அரசுக்கு இணையான அமைப்பு என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அதனால், அமெரிக்க அதிபர்கள் இந்தியா வருகையின்போது, தனிப்பட்ட தலைவருக்கு அளிக்கப்படும் மரியாதை போல அல்லாமல் அமெரிக்க அதிபருக்கு அளிக்கும் வரவேற்பாக மட்டுமே இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:ட்ரம்ப் வருகையால் இந்தியா வல்லரசாகிவிடுமா? - உத்தவ் தாக்கரே கேள்வி

ABOUT THE AUTHOR

...view details