தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 27, 2020, 7:06 PM IST

ETV Bharat / bharat

என்.பி.ஆர் சட்டத்தை புறக்கணிப்போம் - ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் வேண்டுகோள்

'ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், என்.பி.ஆர். சட்டத்தை புறக்கணிப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார். அவரிடத்தில் மூத்த பத்திரிகையாளர் அமித் கோத்தாரி எடுத்த பேட்டி...

Interview of Swaraj India president Yogendra Yadav by senior journalist Amit Agnihotri on the boycott NPR call
Interview of Swaraj India president Yogendra Yadav by senior journalist Amit Agnihotri on the boycott NPR call

'நாம் எல்லோரும் இந்திய குடிமக்கள்' என்ற அமைப்பில் , நீங்களும் அதில் ஒரு அங்கத்தினர். ஏன் தேசிய மக்கள் பதிவேடு சட்டத்தை எதிர்க்கிறீர்கள். இது அரசு வழக்கமாக செய்வதுதானே... நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்னவென்று விளக்க முடியுமா?

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே தேசிய மக்கள் பதிவேடு சட்டத்தை நாங்கள் எதிர்த்து வருகிறோம். அரசால் கொஞ்சம் தாமதமாக கொண்டு வரும் தேசிய மக்கள் பதிவேடு நியாயமற்ற மற்றும் மக்களை பிளவுபடுத்தப்பட முன்மொழியப்பட்ட ஒரு சட்டமாகும். நாட்டின் அனைத்து மக்களையும் கணக்கெடுக்க , அரசு விரும்புவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஏற்கெனவே வாக்காளர் பட்டியல் என்ற பெயரில் அந்த கணக்கெடுப்பு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆதார்கார்டு, ரேசன் கார்டு போன்ற ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் ஏற்கெனவே உள்ளன. எளிமையாக இந்த சட்டம் இல்லை. வாக்காளர் பட்டியலையே , என்.ஆர்.சி வரைவாக கொள்ளலாமே. இந்த பட்டியலில் இருந்து விடுபட்டவர்களை ஐந்து அல்லது 6 மாதங்களுக்கு விண்ணப்பிக்க செய்து, அதில் யார் மீதாவது சந்தேகம் எழுந்தால் அரசு அதிருப்தியை தெரிவிக்கலாமே. புத்தம் புதியதாக லட்சக்கணக்கான அரசு அலுவலர்களை கொண்டு என்.ஆர்.சி தயாரிக்க தற்போது என்ன தேவை எழுந்துள்ளது. ஆவணங்கள் அடிப்படையில் இது இருந்தால் மக்களிடையே பிரிவினையையே ஏற்படுத்தும். இதற்கு முன்னதாக அஸ்ஸாமில் என்.ஆர்.சி எடுக்கப்பட்டது. ஒருவரை இந்த நாட்டின் குடிமகன் இல்லையென்றால் அவரின் நிலை என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கை நமது சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதே போலவே என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர் சட்டங்களும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், இந்த சட்டங்களை நாங்கள் எதிர்க்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்துள்ள மறைமுக ஆயுதம் என்.ஆர்.சி சட்டம் என்று ஏன் கூறுகிறீர்கள்?

உண்மையாக பாரதிய ஜனதாவின் இது மறைமுக ஆயுதம் அல்ல. அஸ்ஸாமில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ்தான் என்.ஆர்.சி பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதனால், பாரதிய ஜனதா விரும்பிய முடிவை அஸ்ஸாம் என்.ஆர்.சி பட்டியல் தரவில்லை. என்.ஆர்.சி சட்டத்தை பயன்படுத்தி குடியேறிய முஸ்லிம்களை வெளியேற்றி விட வேண்டுமென்பது பாரதிய ஜனதா கட்சியின் எண்ணம். அதன் வழியாக, இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அவர்கள் கருதினார்கள். ஆனால், உச்சநீதிமன்றத்தில் கண்காணிப்பின் கீழ் பட்டியல் தயாரிக்கப்பட்டதால் அது நடக்கவில்லை. அஸ்ஸாம் என்.ஆர்.சி பட்டியலியலில் 19 லட்சம் வெளிநாட்டினர் விடுபட்டனர். அதில், இந்துக்கள்தான் அதிகம். இப்போது அஸ்ஸாமில் பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கியாக பெங்காலி இந்துக்கள் உள்ளனர். அதனால், என்.ஆர்.சி யை அகற்றுவோம் என்கின்றனர். உச்சநீதிமன்றம் கண்காணிக்கவில்லையென்றால், நாங்கள் எந்த ரீதியிலும் எந்த விதத்திலும் இதை செயல்படுத்துவோம் என்று பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது. ஏற்கெனவே, அவர்களால் கொண்டு வரப்பட்ட சி.ஏ.ஏ சட்டத்தால் இந்து - முஸ்லிம் மக்கள் பிளவு பட்டு நிற்கிறார்கள். இந்து பிடிபட்டால், அவர்களுக்கு சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை கிடைக்கும். முஸ்லிம்களுக்கு கிடைக்காது, அப்படியென்றால், இந்த திட்டம் எத்தகைய மோசமானது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேற்கு வங்கத்தில் அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதற்காக பாரதிய ஜனதா கட்சி குடியுரிமைச்சட்டம் என்ற பெயரில் ஒட்டு மொத்த நாட்டு மக்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறது.

இந்த சட்டம் நாட்டு மக்கள் அனைவருக்குமே தீங்கு விளைவிக்குமா?

நாட்டில் ஒவ்வொரு மூன்றாவது குடிமகனையும் இந்த சட்டம் பாதிக்கும். ஆதிவாசிமக்கள், தலித் மக்கள் , ஆவணங்கள் இல்லாத ஏழை மக்கள் அனைவரையும் மோசமாக பாதிக்கக் கூடிய சட்டம் இது.

என்.பி.ஆர் சட்டத்தை புறக்கணித்தால் மக்களுக்கு என்ன தீங்குகள் விளையும் ?

நாங்கள் ஒரு சமுதாய ஒத்துழையாமைக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அரசு அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். அரசு அதிகாரிகள் உங்களிடத்தில் வந்தால், அவர்களுக்கு டீ வழங்குங்கள். ஆனால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாதீர்கள். சட்டப்படி இந்த செயலுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படலாம். அதற்காக, அரசின் எந்த ஒரு நலத்திட்டத்தில் இருந்து குடும்பத்தை விலக்கினால் , அது சட்டத்துக்கு எதிரானது. என்.பி.ஆர். சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்காது என்ற தவறான அபிப்ராயத்தை மக்கள் மத்தியில் சிலர் பரப்பி வருகின்றனர். என்.பி.ஆர் சட்டத்தால் அரசாங்கத்தின் நலன் சார்ந்த திட்டங்களில் இருந்து மக்களை விலக்கி வைத்து விட முடியாது. என்.பி.ஆர் சட்டத்தின் ஒரே நோக்கம் என்.ஆர். சி. பட்டியலை தயார் செய்வதற்கு உதவுவதே.

நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?


கடந்த பிப்ரவரி 22 - ம் தேதி மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் நினைவு நாளில் இருந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23- ந் தேதி இந்த விழிப்புணர்வு திட்டம் முடிவுக்கு வருகிறது. 'நாம் எல்லோரும் இந்தியாவின் குடிமக்கள் ' என்ற ஒரே பேனரின் கீழ் 100 அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்த விழிப்புணர்வு திட்டத்தை கையில் எடுத்துள்ளோம். மக்களை சந்தித்து என்.பி.ஆர் சட்டம் குறித்து விளக்கி வருகிறோம். சோசியல் மீடியாக்கள் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். வாய் மொழியாகவும் என்.பி.ஆர் சட்டம் குறித்து மக்களிடத்தில் பரப்பப்படுகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலை, ஜாமியா பல்லையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நீங்கள் எதிர்க்கத் தொடங்கனீர்களா அல்லது என். பி.ஆர் சட்டத்தின் தன்மை காரணமாக எதிர்க்கிறீர்களா?

நான் என்னை இந்த சட்டத்தை எதிர்க்கும் ஒரு முகமாக கருதவில்லை. உண்மையை சொல்லப் போனால், இந்த நாட்டின் பெண்கள்தான் என்.பி.ஆர் சட்டத்துக்கு எதிர்ப்பாளர்கள். ஜாமியா பல்கலையில் இரு மாணவிகள்தான் போலீஸால் தாக்கப்பட்ட மாணவனை பாதுகாத்தார்கள். ஜவஹர்லால் பல்கலையில் ஆயிஷி கோஷ் என்ற பெண்தான் இருக்கிறார். சாகின் பாக்கில் பெண்கள்தான் போராடி வருகின்றனர். சாம்பல் தாடி கொண்ட ஆண்களை எதிர்ப்பு முகமாக நான் கருதவில்லை இந்த நாட்டின் பெண்களைத்தான் என்.பி.ஆர் சட்டத்தின் எதிர்ப்பு முகமாக பார்க்கிறேன்.

ABOUT THE AUTHOR

...view details