தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எழுச்சியை உருவாக்கும் புதிய தலைவர் காங்கிரசுக்கு தேவை - சஞ்சய் ஜா

காங்கிரஸ் தலைமை தொடர்பான சலசலப்பு சில நாட்களாக நீடித்துவரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அக்கட்சியிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா உடன் மூத்த செய்தியாளர் அமித் அக்னிஹோத்ரி நடத்திய கலந்துரையாடல் இதோ.

Sanjay Jha
Sanjay Jha

By

Published : Aug 26, 2020, 6:49 PM IST

காங்கிரஸ் இத்தகைய குழப்பத்தை சந்திக்க காரணம் என்ன?

2024ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க காங்கிரஸ் இதுவரை சரியான தலைமையை கண்டடையவில்லை. மேலும், கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் இருப்பது அதன் அடிப்படையை வழுவிலக்கச் செய்துள்ளது. பொறுப்புமிக்க நபரை கண்டடைவதில் சிக்கல் எழுந்துள்ளது. கட்டமைப்பு ரீதியான சிக்கல், தலைமைக்கான வெற்றிடம், கொள்கை ரீதியான குழப்பம் இந்த மூன்று காரணிகளும் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் விதமாக மாநில தலைவர்கள் பலவற்றை காங்கிரஸ் வளர்த்தெடுக்க வேண்டும்.

காங்கிரசின் இந்த சூழலுக்கு யார் பொறுப்பு?

பிரதான பொறுப்பை காங்கிரஸ் தலைமைதான் ஏற்க வேண்டும். காங்கிரஸ் தலைவர், அதன் காரிய கமிட்டிதான் இந்த ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சி மோசமான சூழலுக்கு கொண்டு பாஜகவுக்கு எளிமையான களத்தை ஏற்படுத்திவிட்டனர்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தால் மாற்றம் ஏதும் ஏற்படவில்லையே?

கட்சியின் சிக்கல் குறித்து 23 மூத்த தலைவர்களின் கருத்தை கட்சி கண்டுகொள்ளவில்லை என்றால் அதன் நஷ்டத்தை கட்சிதான் சந்திக்க வேண்டும். அவர்களின் கோரிக்கை அர்த்தமுள்ளது, நியாமானது. காங்கிரஸ் தன்னை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என கட்சியின் சில மூத்த, இளம் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை மேற்கொள்ளதா பட்சத்தில், காங்கிரஸ் தனக்குத் தானே மரண சாசனம் எழுதிக்கொள்வதாகவே பொருள்.

கட்சியில் இத்தனை அதிருப்தியாளர்கள் இருக்க காரணம் என்ன?

இவர்களை அதிருப்தியாளர்கள் எனக் கூற முடியாது. அவர்கள் கட்சியின் ஜனநாயகக் குரல்கள். கட்சி மீதும் அதன் கொள்கை மீதும் தொடர் ஈடுபாடு கொண்ட இவர்கள், பாஜகவை வீழ்த்த காங்கிரசால் மட்டுமே முடியும் என நம்புகின்றனர். இதே கருத்துடன் சுமார் 300 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்.

காங்கிரஸ் இத்தகைய சூழலில் செய்ய வேண்டியது என்ன?

களத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் தலைவர் ஒருவரை காங்கிரஸ் உடனடியாக நியமிக்க வேண்டும். கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் தரும்வகையில் பாஜகவை எதிர்க்க கட்சியை தயார் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியை தொலைநோக்கு பார்வையுடன் வழிநடத்தும் தலைவரே தற்போது தேவை.

காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே?

காங்கிரஸ் தலைராக பொறுப்பேற்க விரும்பவில்லை என ராகுல் காந்தியே வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். ராகுலின் கருத்தை வழி மொழியும் விதமாக காந்தி குடும்பத்தை சேராத ஒருவரே தலைவராக வேண்டும் என பிரியங்காவும் தெரிவித்துள்ளார். இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருக்கும் நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்தி புதிய தலைவரை நியமிக்க வேண்டும்.

காந்தி குடும்பத்தை சேராத ஒருவரால் கட்சிக்கு நல்ல தலைமையை தர முடியுமா?

ஒவ்வொரு நபர்களும் தங்களுக்கென பலம், பலவீனம், யுக்தி ஆகியவற்றை கொண்டுள்ளனர். எனவே, புதிய நபருக்கு வாய்ப்பு தந்த பின்னரே அவர்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய முடியும். நடைமுறைபடுத்துவதற்கு முன்னரே எவ்வாறு விளைவுகள் குறித்து கருத்து சொல்ல முடியும்.

ABOUT THE AUTHOR

...view details