தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் மீண்டும் இணைய சேவை! - Internet service restored in 5 districts of JK

ஸ்ரீநகர்: பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜம்மு-காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், ஐந்து மாவட்டங்களில் மீண்டும் இன்று 2ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

jk

By

Published : Aug 17, 2019, 10:09 AM IST

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி (370, 35ஏ) ரத்து, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட காரணங்களால் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் அங்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பிவருவதால் ஜம்மு, ரீசி, சம்பா, கத்துவா, உதாம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2ஜி எனப்படும் இரண்டாம் அலைக்கற்றை இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக இணைய சேவை இல்லாமல் தவித்துவந்த பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசு ஊழியர்கள் மீண்டும் தங்களது பணியை தொடங்கலாம் என ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்றே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details