திருவனந்தபுரம்:சர்வதேச கொள்ளை கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானைச் சேர்ந்த நான்கு பேர் கொள்ளை வழக்கில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். கன்டோன்மென்ட் காவல் துறையினர் ஒரு சொகுசு தங்கு விடுதியில் வைத்து இவர்களை கைதுசெய்தனர்.
நிதி நிறுவனங்களில் கொள்ளையடிக்க சதிதிட்டம் தீட்டிய வேளையில் காவல் துறையினர் கையில் இவர்கள் பிடிப்பட்டுள்ளனர். இவர்கள் பேரில் மாநிலத்தில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபாசம் நிறைந்த விளம்பரங்களுக்கு இடைக்கால தடை: நீதிமன்றம் அதிரடி!
இந்த கும்பலில் மேலும் பல பேர் இருக்க வாய்ப்புள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செர்தலாவில் இவர்கள் மீது ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால், நால்வரும் செர்தலா காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.