ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த ஜாலோ குமாரி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கால்பந்தாட்டப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பள்ளி, கல்லூரிகளில் பல போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாடி உள்ளார்.
அப்படி அவர், பிரேசில், பிரான்ஸ், ருமேனியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் அவருக்கு முறையான ஊக்கத்தொகை கிடைக்காததால், வீட்டில் திருமணம் செய்துவைத்தனர். தற்போது அவர், தனது கிராமத்தில் உள்ள வேளாண் பணிகளைச் செய்துவருகிறார்.