கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பயணிகள் போக்குவரத்து விமானங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், உள்நாட்டு விமானங்களை இயக்குவதற்கு மே 25ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.
சர்வதேச விமானங்களின் தடை நீட்டிப்பு - சர்வதேச விமானங்கள்
டெல்லி: சர்வதேச விமானங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே, ஒரு சில நாடுகளுடன் மட்டும் ஒப்பந்தம் மேற்கொண்டு முக்கியத்துவம் கருதி விமான போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சர்வதேச விமானங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நவம்பர் 30ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, விமான போக்குவரத்து இயக்குநரகத்தால் சில விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.