உலக அளவில் போதைப்பொருள் இல்லாத ஒரு சர்வதேச சமூகத்தின் இலக்கை அடைவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக போராடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
சட்டவிரோத மருந்துகள் சமூகத்திற்கு ஏற்படுத்தும் முக்கிய பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் உலகளவில் கடைப்பிடிக்கப் படுகிறது.
வரலாறு: போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையால் அனுசரிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் (UNODC) வெளியிட்டுள்ள உலக மருந்து அறிக்கை 2017-ன் படி, 25 கோடி மக்கள் (உலக அளவில் 5.3% மக்கள்) 2015-ல் ஒரு முறையாவது போதைமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களில், சுமார் 3 கோடி மக்கள் (உலக அளவில் 0.6 சதவீதம்) போதைப்பொருள் பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2020க்கான கருப்பொருள்
2020: சிறப்பாக கவனிக்க சிறந்த அறிவு: சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம்-2020 க்கான “சிறப்பாக கவனிக்க சிறந்த அறிவு” என்ற கருப்பொருள் உலக போதைப்பொருள் பிரச்சினையைப் புரிந்து கொள்ளும் தன்மையை மேம்படுத்துவதன் அவசியத்தை, சிறந்த அறிவு அதிக அளவில் பேணப்படும் சுகாதாரம், ஆளுமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் மேற்கொள்ள வலியுறுத்துகிறது.
2019: நீதிக்கான ஆரோக்கியம். ஆரோக்கியத்திற்கான நீதி- போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போது நீதியும் ஆரோக்கியமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை கருப்பொருள் வலியுறுத்துகிறது.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் போதைக்கு அடிமையாதல் என்றால் என்ன?
சட்டபூர்வமான அல்லது சட்டவிரோதமான பொருளை நீங்கள் பயன்படுத்த கூடாத வகையில் பயன்படுத்தும்போது போதைப்பொருள் பயன்பாடு ஏற்படுகிறது. உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளின் வழக்கமான அளவை விட அதிகமாக நீங்கள் எடுத்துக் கொண்டாலோ அல்லது உங்களுக்கு பரிந்துரைக்கப்படாத மாத்திரைகளை நீங்கள் அதிகமாக பயன்படுத்தினாலோ, போதைப்பொருள் பயன்படுத்தும் போது நீங்கள் நிம்மதியாக இருப்பதாக உணர ஆரம்பிக்கும் போதோ அல்லது யதார்த்தத்தைத் தவிர்க்க விரும்பினாலோ நீங்கள் போதை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளீர்கள் என சொல்லலாம்.
நீங்கள் அதற்கு அடிமையாக இல்லாவிட்டால், இந்த தேவையற்ற பழக்கவழக்கங்களை நீங்கள் கட்டுப்படுத்தவோ அல்லது அவற்றை முழுவதுமாக கைவிடவோ முடியும். போதை மருந்துகள் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நிதி நெருக்கடி இருந்தாலும், உங்களுடன் அன்பாக இருப்பவர்களின் உறவு பாதிக்கும் நிலை வந்தாலும் போதை பழக்கம் அதிலிருந்து உங்களை மீள விடாது
இந்தியாவில் போதைப்பொருள்
கடந்த இருபது ஆண்டுகளாக , போதைப்பொருள் நுகர்வு நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பிப்ரவரி 2019 இல், புது தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையம் (என்.டி.டி.டி.சி) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட “இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாட்டின் அளவு”என்ற தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
தேசிய அளவில் 10 வயது முதல் 75 வயது வரையுள்ள 14.6 விழுக்காடு மக்கள் (சுமார் 16 கோடி) தற்போது மது அருந்துகின்றனர்
கடந்த 12 மாதங்களுக்குள் சுமார் 2.8 விழுக்காடு இந்தியர்கள் (3.1 கோடி மக்கள்) ஏதாவது ஒரு கஞ்சா பொருளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுப்பின் போது சுமார் 2.06 விழுக்காடு மக்கள் அபின் பயன்படுத்துவதாகக் கூறினர். சுமார் 0.55 விழுக்காடு இந்தியர்களுக்கு அபின் பயன்பாட்டு பிரச்சினைகளுக்கு உதவி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது
தேசிய அளவில், சுமார் 8.5 லட்சம் பேர் போதை மருந்துகளை ஊசி மூலம் செலுத்துக் கொள்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
முக்கிய அம்சங்கள்
டெல்லி-அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையம் (என்.டி.டி.டி.சி) கணக்கெடுப்பு ஆய்வுகள் படி இந்தியாவில் 5.7 கோடி மக்கள் மது தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களாக உள்ளனர்.
இந்தியா முழுவதும் 16 கோடி மக்கள் மது அருந்துகிறார்கள், மது அருந்துவதில் பெண்களை விட ஆண்கள் 17 மடங்கு அதிகமாக உள்ளனர்.