தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொலை மிரட்டல் விடும் குடும்பத்தினர் - பாதுகாப்பு வேண்டி காதல் ஜோடி வேண்டுகோள்! - காதல் ஜோடி

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண், பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால் அவரது குடும்பத்தாரிடமிருந்து பாதுகாப்பு வேண்டி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

வீடியோ பதிவிட்ட காதல் ஜோடி
வீடியோ பதிவிட்ட காதல் ஜோடி

By

Published : Sep 18, 2020, 2:07 AM IST

Updated : Sep 18, 2020, 2:36 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்த நிலையில், ஆகஸ்ட் 18ஆம் தேதி இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தார். அந்த இளைஞரையும், அவரது குடும்பத்தாரையும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டி காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். ஆனால், காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து, காதல் ஜோடி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில், தாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டதால், இதனை எதிர்த்து தனது குடும்பத்தினர், தனது கணவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: வாய் பேச முடியாத காதல் ஜோடி தற்கொலை - வெளியான வீடியோ

Last Updated : Sep 18, 2020, 2:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details