இது தொடர்பாக காவல் ஆணையர் ஆனந்த் ஸ்ரீவாஸ்தவ் கூறுகையில், "போதைப்பொருள் விற்பனைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள, காவல் துறை கூடுதல் ஆணையர் அசோக் குமார் தலைமையில், சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டது. 'ஆப்பரேஷன் கிளீன் ஸ்வீப்' என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது
ஜெய்ப்பூர்: ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலை ஜெய்ப்பூர் காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ .6 லட்சமும், ஒரு சொகுசு காரும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தும் கும்பல் சிக்கியது
இந்த நடவடிக்கையில், நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 64 கிலோ போதைப்பொருள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ராஜஸ்தானின் பல மாவட்டங்களுக்குப் போதைப்பொருள்களைக் கொண்டுசெல்வதில் இந்தக் கும்பல் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" எனத் தெரிவித்தார்.