மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் பிரச்னை வந்து, அவற்றில் பல இன்றளவும் தீர்க்கபடாமல் உள்ளன. தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி பிரச்னை பல காலங்களாக இருந்துவருகிறது. இதுபோல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனை தீர்க்கும் விதமாக நாடு முழுவதும் நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - நதிநீர் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா
டெல்லி: நாடு முழுவதும் நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இந்த சட்டத்தைக் கொண்டு வர மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் விவகார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "நதிநீர் பிரச்னைகளை தீர்க்க ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டிருந்தாலும், காவிரி ஆணையத்தின் பணி தொடர்ந்து நடைபெறும்" என்றார்.
இந்த சட்டத்தினால் மாநிலங்களின் உரிமை பறிபோகும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்த நிலையிலும், நதிநீர் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.