ஸ்ரீநகர், அவந்திபோரா, ஜம்மு, பதான்கோட், ஹிண்டன் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படைத் தளங்கள் அதிக பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த பத்து பேர் கொண்ட கும்பல் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
'விமானப்படைத் தளங்களில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடக்கலாம்' - எச்சரிக்கை விடுத்த புலனாய்வு அமைப்புகள்! - warning against a module, Jaish-e-Mohammed (JeM) terrorists
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விமானப்படைத் தளங்களில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தவுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Intelligence agencies have issued warning against a module
பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தலையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விமானப்படைத் தளங்கள் 24 மணிநேரமும் தீவிரப் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் நகர்வுகள் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்பட்ட பின்னரே, இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு அலுவலர்களிடமிருந்து தகவல்கள் வெளி வந்துள்ளன.
இதையும் படிங்க: தற்கொலைப்படை தாக்குதல்: நூலிழையில் உயிர்தப்பிய ஆப்கான் அதிபர்