இந்திய ராணுவத்திற்குத் தேவையான தொழில் நுட்பம், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவைக் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் அமைப்பாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு விளங்குகிறது. சுருக்கமாக டி.ஆர்.டி.ஓ (Defence Research and Development Organisation) என்பர்.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் டி.ஆர்.டி.ஓ அமைப்பில் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 131 விஞ்ஞானிகள் அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக வேலையை ராஜினாமா செய்திருக்கின்றனர். தற்போது டி.ஆர்.டி.ஓ-வில் பணிபுரிபவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 7 ஆயிரத்து 353 பேர் எனக் கூறப்பட்டாலும் 7 ஆயிரத்து 68 பேர்தான் உள்ளனர். அவர்களில் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 30 விழுக்காடு என்னும் மிகவும் குறைந்த அளவில் உள்ளனர்.