தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலி ஏடிஎம் கார்டுகளை வைத்து டெல்லியில் திருட்டு!

டெல்லி: போலி ஏடிஎம் கார்டுகளை வைத்து மக்களின் பணம் திருடப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திருப்பியளிக்கப்படும் என ஸ்டேட் வங்கி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

instances-of-cloned-atm-cards-in-delhi-affected-customers-to-get-refund-sbi
instances-of-cloned-atm-cards-in-delhi-affected-customers-to-get-refund-sbi

By

Published : May 12, 2020, 4:48 PM IST

டெல்லியில் போலி ஏடிஎம் கார்டுகளை வைத்து பொதுமக்கள் பலரின் பணம் திருடப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கி ஏடிஎம் கார்டுகளை வைத்து வேறு வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் திருடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து திருடப்பட்ட பணம் திருப்பியளிக்கப்படும் என ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் சந்தேகம் இருக்கும் சில பணவர்த்தனைகள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்டேட் வங்கி சார்பாக பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

அது, ''ஏடிஎம் கார்டுகளின் கடவுச்சொல்லை ஏடிஎம் அட்டைகளில் எழுத வேண்டாம். ஏடிஎம் கடவுச்சொல்லை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும். கடவுச்சொல்லை சரியான காலகட்டத்தில் மாற்ற வேண்டும்.

பிறந்ததேதி, திருமண நாள் ஆகியவற்றை கடவுச்சொல்லாக வைக்கவேண்டாம். பயனாளர்களின் அலைபேசி எண்ணை வங்கிக் கணக்கில் இணைக்கவேண்டும்'' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் முகவரி கேட்பதுபோல் நடித்து பணம் பறிப்பு: ஆறு பேருக்கு வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details