தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை" - ஆனந்த் மஹிந்திரா ட்வீட் - மாற்றுத்திறனாளி குழந்தையின் காணொளி ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

மும்பை: மாற்றுத்திறனாளி குழந்தையின் காணொளி ஒன்றை பார்த்து என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என ஆனந்த் மஹிந்திரா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Anand Mahindra

By

Published : Sep 22, 2019, 1:49 PM IST

சமூக வலைதளங்களில் கைகளற்ற மாற்றுத் திறனாளி குழந்தை ஒன்று, சாப்பிடுவதற்கு தனது கால்களை பயன்படுத்துகிறது. இதனைக் கண்ட மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா அந்த குழந்தையை பற்றி உருக்கமான ட்வீட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்வீட்டர் பதிவில், "சமீபத்தில் எனது பேரக்குழந்தையை பார்த்தேன். அதனை பார்த்த என்னால் எனதுக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாழ்கை நமக்கு கொடுக்கும் சவால்களும் குறைபாடுகளும் ஒரு பரிசாகும்.

அதனை பயன்படுத்த வேண்டியது நம்முடைய கடமை. இதுபோன்ற காணொளிகள் எனது அயராத நம்பிக்கையை இன்னும் தக்கவைக்க உதவுகிறன்றது" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

திருமணம் செய்து கொள்ளுங்கள் ப்ளீஸ்...ரசிகைக்கு மாதவன் தந்த இன்ப அதிர்ச்சி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details