இந்தியில் அமீர் கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் '3 இடியட்ஸ்'. இது, பின்னர் தமிழில் நடிகர் விஜய், ஜீவா நடிப்பில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமெக் செய்யப்பட்டது . இத்திரைப்படத்தில் வரும் சத்தியராஜ் கதாபாத்திரத்தைப் போல சத்தீஸ்கரைச் சேர்ந்த காவ்யா சாவ்தா என்ற சிறுமி, இரு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் அபார ஆற்றல் பெற்றுள்ளார்.
தனது தனித்துவ திறமை குறித்துப்பேசிய காவ்யா சாவ்தா, "இப்படி ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதப் பொறுமை மிக முக்கியம். நான் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பயிற்சி செய்துவருகிறேன். இப்படி எழுதுவதற்கான ஐடியா '3 இடியட்ஸ்' திரைப்படத்திலிருந்து எனக்கு வந்தது" என்று கூறினார்.