டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமுற்று சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, டெல்லி வன்முறை பிரச்னையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்புவோம் என்றார்.
இதுமட்டுமின்றி மத்தியப் பிரதேச அரசியல் நிலவரத்தையும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எழுப்ப உள்ளது. முன்னதாக மத்தியப் பிரதேச அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த திக் விஜய் சிங், பாரதிய ஜனதா குதிரைபேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார். மூத்தத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஆதீர் ரஞ்சன் சௌத்ரி, 'பாஜக அரசியல் வேட்டைக்காரன்' என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க:பவன் குப்தா கருணை மனு நிராகரிப்பு