தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

80 நாட்கள் கடந்து கொச்சி வந்த ஐ.என்.எஸ். சுனைனா!

கொச்சி: இந்திய கடற்படையின் அதிநவீன ரோந்துக் கப்பலான ஐ.என்.எஸ். சுனைனா, ஏடன் வளைகுடாவில் தனது திருட்டு எதிர்ப்புப் பணியை(anti-piracy deployment) வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று கொச்சி துறைமுகம் வந்தடைந்தது.

INS Sunayna
INS Sunayna

By

Published : May 23, 2020, 1:45 AM IST

Updated : May 23, 2020, 8:35 AM IST

இந்திய கடற்படையின் அதிநவீன கடல்வழி ரோந்துக் கப்பலான ஐ.என்.எஸ் சுனைனா, ஏடன் வளைகுடாவில் தனது திருட்டு எதிர்ப்புப் பணிகளை முடித்து, வெள்ளிக்கிழமை அதிகாலை கொச்சிக்கு வந்ததாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு கடற்படை கட்டளையின் கீழ், அமைந்துள்ள இந்தக் கப்பல், கோவிட் -19 தொற்றுநோயால் 80 நாட்களுக்கு எந்த துறைமுகத்திலும் நுழையாமல் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது. இதனால், இந்தக்கப்பல் கொச்சி வந்து சேர நீண்டநாட்கள் ஆகிவிட்டன.

இதற்கான எரிபொருளை இத்தனை நாட்களும் இந்திய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படையின் டேங்கர்கள் வழங்கின.

இந்தக் கப்பலை தெற்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர் எனவும்; கப்பலின் ஸ்டெர்லிங் செயல்திறனை அதிகாரிகள் வாழ்த்தினார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவு: நிர்வாகக் குழு அமைப்பு

Last Updated : May 23, 2020, 8:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details