தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 9, 2020, 5:49 PM IST

ETV Bharat / bharat

698 இந்தியர்களுடன் கொச்சிக்கு விரையும் ஜலாஷ்வா கப்பல்!

டெல்லி: இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஜலாஷ்வா கப்பலில் (Jalashwa ship ) மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் 698 இந்தியர்களை கொச்சிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

ே்
ே்ே்

ஊரடங்கு உத்தரவால் பல நாடுகளில் மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மத்திய அரசு தனி விமானங்கள் "வந்தே பாரத் மிஷன்" மூலம் அழைத்து வருகின்றன. அந்த வகையில், மாலத்தீவில் சிக்கித்தவித்து கொண்டிருந்த 698 இந்தியர்களை, இந்தியக் கடற்படை ஜலாஷ்வா கப்பலில் மீட்கப்பட்டு கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

இதுகுறித்து கடற்படை அலுவலர்கள் கூறுகையில், "வெளிநாடுகளிலிருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக தொடங்கிய வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக தான் ஜலாஷ்வா கப்பல் செயல்படுகிறது. கப்பல் மாலத்தீவில் மாலி பகுதியிலிருந்து புறப்பட்டுள்ளது.

இதில், மொத்தமாக 595 ஆண்களும் 103 பெண்களும் என 698 பேர் பயணம் செய்கின்றனர். 19 கர்ப்பிணி பெண்கள் உள்ளதால் முக்கியத்துவம் அளித்து கப்பலில் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் பயணிக்கும் மக்களின் நலன் கருதி பேக்கேஜ் கிருமிநாசினி நிலையங்கள் (Baggage disinfection stations), மருத்துவப் பரிசோதனை மையம் (medical screening) அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

இதே போல், பல நாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை அழைத்து வர 64 விமானங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், கடற்படை சார்பாக இரண்டு கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவிட்-19 நோயாளி மீது லென்சிலுமாப் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை!

ABOUT THE AUTHOR

...view details