தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்துத்துவா vs இன்குலாப் - சவால் விடும் இடதுசாரிகள்! - இந்துத்துவா vs இன்குலாப்

கொல்கத்தா: இந்துத்துவாவை எதிர்க்ககூடிய வலிமை இடதுசாரி கொள்கைக்கு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Communist

By

Published : Oct 19, 2019, 1:34 AM IST

Updated : Oct 19, 2019, 2:01 AM IST

2020ஆம் ஆண்டோடு கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆக உள்ளது. இதனை ஆண்டு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக கொல்கத்தாவில் அக்கட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், "இந்துத்தவாவின் தாக்குதலை தடுக்க சிவப்பு வண்ண கொடியால் மட்டுமே முடியும். நாட்டில் உள்ள இந்துத்துவ மதவாதத்தினை எதிர்த்து, சோசலிச நாடாக மாற்ற 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற சொல்லுக்கே திறன் உள்ளது.

வலுதுசாரி சக்திகளை எதிர்க்க ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் ஒன்றுபட வேண்டும். பிடித்தவற்றை கூற அவர்களுக்கு உரிமை உள்ளது.

ஆனால், நாங்கள் எங்கள் மனதில்பட்டதை தெரிவித்தால் 'அர்பன் நக்சல்' என்ற முத்திரை குத்தப்படுகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டை விட்டு துரத்துவோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

யார் குடியேறிகள் என்பது அவருக்கு எப்படி தெரியும்? அடிப்படை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உபா சட்டம் உள்ளது" என்றார்.

Last Updated : Oct 19, 2019, 2:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details