தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொற்றிய கொரோனா... பெட்டியைக் கட்டிய இன்போசிஸ்!

பெங்களுரு: ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நிலையில், பெங்களுருவில் உள்ள அலுவலகத்தை இன்போசிஸ் காலி செய்தது.

Infosys Infosys vacates building COVID-19 Coronavirus IT company Bengaluru coronavirus தொற்றிய கொரோனா.. பெட்டியை கட்டிய இன்போசிஸ் பெங்களுரு இன்போசிஸ் அலுவலகம் Infosys vacates building in Bengaluru due to COVID-19 scare
Infosys vacates building in Bengaluru due to COVID-19 scare

By

Published : Mar 14, 2020, 8:42 AM IST

பெங்களுருவின் தெற்கு புறநகரிலுள்ள ஒரு அலுவலகத்தை இன்போசிஸ் நிறுவனம் காலி செய்தது. ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களுரு மேம்பாட்டு மைய தலைவர் குருராஜ் தேஷ்பாண்டே கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை செய்துள்ளோம். இதன் நோக்கம் எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே. இது பற்றி அவதூறாக பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு இதுவரை நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுக்க ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த நோய் தொற்றுக்கு, 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஷேக் அப்துல்லாவின் நினைவிடத்திற்கு சென்ற ஃபருக் அப்துல்லா

ABOUT THE AUTHOR

...view details