சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில், முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்நோயின் தாக்கம் மற்ற நாடுகளில் கடுமையாக எதிரொலித்தது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, இந்தியா போன்ற நாடுகளில் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்தியாவில் இதுவரை 1,071 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 942 பேருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே, கரோனா வைரஸ் நோய் தடுப்புக்காக பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கி வருகின்றனர். டாடா நிறுவனம் ரூ. 1,500 கோடியும், பேடிஎம் ரூ.500 கோடியும் நிதியுதவி அளித்தன.