தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்சிக்குள் குழப்பம்: மம்தாவுக்கு தலைவலி - மம்தாவுக்கு தலைவலி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் நிலவுவதால் மம்தாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

திரிணாமுல்
திரிணாமுல்

By

Published : Jun 16, 2020, 12:01 AM IST

மேற்குவங்கத்தை கரோனா வைரஸ் நோய் ஒரு புறமும் ஆம்பன் புயல் மறு புறமும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த இரு விவகாரங்களில் அரசு கையாண்ட விதத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 2021ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது முதலமைச்சர் மம்தாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு பத்து மாதங்களே உள்ள நிலையில், பல விவகாரங்களில் கட்சித் தலைவர்களிடையே மாற்றுக்கருத்து நிலவிவருகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் சவாலாக இருந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கட்சித் தலைவர்களிடையே மம்தா சமாதானம் ஏற்படுத்துவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்தது தான் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி சட்டப்பேரவைத் தேர்தலில் தொடருமா அல்லது ஆட்சி அமைத்து பாஜக வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: டெல்லியில் மீண்டும் ஊரடங்கு? - அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

ABOUT THE AUTHOR

...view details