தெலங்கானா மாநிலம், மகபூப் நகர் மாவட்டத்தில் பிறந்த 20 நாளான குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த குழந்தைக்குக் கரோனா தொற்று தந்தையிடமிருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்த இக்குழந்தை, மருத்துவர்களின் அதீத கவனிப்பால் 45 நாளில் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளது.
கரோனாவை வென்று காட்டிய பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை! - National News
ஹைதராபாத்: மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்று வந்த, பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை, குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளது.
ே்
இதுகுறித்து தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்தர் கூறுகையில், "குழந்தை குணமடைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். இதுவரை அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,016ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குணமடைந்தவர்களை மீண்டும் தாக்குமா கரோனா?...