இந்தியாவின் மூத்தத் தூதரான இந்திரா மணி பாண்டே ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாகவும், ஜெனீவாவில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளின் இந்தியத் தூதராகவும், நியமிக்கப்பட்டுள்ளார்.
1990ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு சேவை அலுவலராக இருந்த பாண்டே தற்போது வெளிவிவகார அமைச்சகத்தின் (எம்இஏ) கூடுதல் செயலாளராக பணியாற்றிவருகிறார்.
அவர் விரைவில் இந்தப் பணியைத் தொடங்குவார் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாண்டே தன் வாழ்க்கையில் டமாஸ்கஸ், கெய்ரோ, இஸ்லாமாபாத், காபூல், மஸ்கட், ஜெனீவா ஆகிய நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.
வெளியுறவு துறை அமைச்சகத்தின் தலைமையகத்தில் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் பிரிவில் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.