தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுவன் விற்பனைக்கு வைத்திருந்த முட்டைகள் உடைக்கப்பட்ட விவகாரம்:பாஜக எம்.எல்.ஏ உதவிக்கரம்! - சிறுவன் முட்டை விவகாரம்

இந்தூர் நகரின் நடைமேடையில் முட்டை வியாபாரம் செய்து கொண்டிருந்த சிறுவனின் தள்ளுவண்டியை கீழே சாய்த்து மாநகராட்சி அலுவலர்கள் அராஜகத்தில் ஈடுப்பட்ட சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, அதனைத் தொடர்ந்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் மெண்டோலா சிறுவனுக்கு தேவையான உதவிகள் செய்ய முன்வந்துள்ளார்.

இந்தூர்
இந்தூர்

By

Published : Jul 26, 2020, 4:07 PM IST

இந்தூர் (மத்திய பிரதேசம்): மாநகராட்சி ஊழியர்களால் சிறுவன் விற்பனைக்கு வைத்திருந்த முட்டைகள் உடைத்த சம்பவத்திற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் மெண்டோலா வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவனுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும் என்று உறுதியளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், சிறுவனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக நான்கு ஜோடி துணிகள், மிதிவண்டி, 2500 ரூபாய் பணத்துடன் வீடு கட்டி தருவதற்கான உத்தரவாதத்தையும் ரமேஷ் அளித்துள்ளதாக சிறுவனின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

லஞ்சம் கொடுக்காததால் முட்டை வண்டியை தள்ளி விட்ட அலுவலர்கள்!

இவ்விவரம் அறிந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய சிங், சிறுவனுக்கு ஆகும் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், நகர காங்கிரஸ் உறுப்பினர்கள் மூலம் சிறுவனுக்கு தன் சொந்த பணத்திலிருந்து 10,000 ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

முன்னதாக, மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் சாலையோரத்தில் தள்ளுவண்டிக் கடையில் 13 வயது சிறுவன் முட்டைகளை விற்றுக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள், அந்த சிறுவனிடம் 100 ரூபாய் லஞ்சமாக கேட்டு மிரட்டியுள்ளனர்.

மாரிதாஸ் மீது மோசடி வழக்குப்பதிவு!

அந்தச் சிறுவன் இன்னும் வியாபாரம் ஆகாததால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளான். இருந்தபோதும், பணம் தரவில்லையெனில் இந்த இடத்தில் கடை நடத்த முடியாது எனக் கூறியுள்ளனர். இதற்கு பதலளித்த சிறுவன், கரோனா காலம் என்பதால் வியாபாரம் ஆகவில்லை, அப்படி இருக்க வியாபாரத்தில் பங்கு கேட்பது என்ன நியாயம்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details