தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா மாதிரிகளை சேமிக்கும் மருத்துவருக்கு வைரஸ் தொற்று - Indore doctor documenting COVID-19 tests

போபால்: கரோனா மாதிரிகளை சேமித்து வைக்கும் வைராலஜி ஆய்வகத்தின் மருத்துவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Apr 20, 2020, 11:03 AM IST

கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கரோனாவுக்கு எதிராக போராடும் களவீரர்களான மருத்துவர்கள், காவல் துறையினர், ஊடகவியலாளர் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு வைராலஜி ஆய்வகத்தில் கரோனா தொற்று மாதிரிகளை சேமித்து வைக்கும் தொடர்பான ஆவண விவரங்களை கையாளும் மருத்துவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், "வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர், கரோனா மாதிரிகளை ஆராய்ச்சியோ அல்லது பரிசோதனையோ செய்ய மாட்டார். கரோனா மாதிரிகளின் ஆவண விவரங்களை சேகரிப்பதுதான் வேலை. தற்போது, இவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னெற்றம் ஏற்பட்டுள்ளது. இவருடன் தொடர்பிலிருந்த நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்", என்றார்.

மேலும், மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் (MYH) பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர், செவிலியர் மற்றும் சில ஊழியர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க:கோவிட்-19 தாக்கம்: ஸ்விகி, சொமாட்டோ டெலிவரிக்குத் தடை!

ABOUT THE AUTHOR

...view details