தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தூரில் 36 பேருக்கு கரோனா உறுதி! - mathya pradesh news

இந்தூர்: தூய்மை நகரமாக அடையாளப்படுத்தப்படும் இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

கரோனா
கரோனா

By

Published : Jun 4, 2020, 4:37 PM IST

இந்தியாவின் தூய்மையான நகரங்களில் தொடர்ந்து 4ஆவது முறையாக மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்தூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை கரோனாவை சிறப்பாக கையாளும் நகரங்களிலும் இந்தூர் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது.

ஆனால் தற்போது இந்தூரில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால் அந்நகரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 633 ஆக உயர்ந்துள்ளது என சுகாதராத் துறை அலுவலர் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா பாதித்த மாவட்டங்களிலேயே மிக மோசமான நகரமாக இந்தூர் கருதப்படுகிறது. கடந்த நான்கு நாளில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் உள்பட நான்கு பேர் உயிரிழந்ததையடுத்து, கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 பேராக உயர்ந்தது. இரண்டு ஆயிரத்து 184 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.

இதையும் படிங்க: வீல் சேரில் அமர்ந்திருக்கும் தாயுடன் சகோதரனை தேடும் சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details