இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 5.33 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பாண்டன் பகுதியில் இருந்து 151 கி.மீ தருணத்தில் கடலுக்கடியில் 42.8 கி.மீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!
இந்தோனேசியா: சுமத்ரா தீவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
earthquake
நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களில் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சுமத்ரா தீவில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தலைநகர் ஜகர்த்தாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள், என்ன பாதிப்புகள் ஏற்பட்டது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.