இந்தியாவுடன் அதிக நட்புறவாகவும், நல்லிணக்கமாகவும் இருந்துவரும் நாடு நேபாளம். இந்தியாவுக்கு வெளியே, இந்து மதம் முழுமையாக பரவியிருக்கும் நாடு நேபாளம் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாச்சார அடிப்படையிலும், பொருளாதார, சமூக அளவிலும் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் மிகப் பெரிய பிணைப்பு இருந்து வருகிறது. அனால் தற்போது நிகழும் காட்சிகள் அந்த பிணைப்பை உடைப்பது போலுள்ளது.
இந்த சிக்கலான சூழலில், இந்திய- நேபாள உறவுகளை கடந்த 30 ஆண்டுகளாக உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர் யுபராஜ் கிமிர், நமது ஈடிவி பாரத் மண்டல ஆசிரியர் ப்ரஜ் மோகனுடன் உரையாடியுள்ளார். அவர்களது உரையாடலின் சிறு பகுதி இங்கே:
இந்திய – நேபாள உறவை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த இரு நட்புறவு நாடுகளுக்குள் பூசல்கள் ஏற்பட காரணம் என்ன?
கோவிட்-19 பாதிப்புகளால் உலகளவில் அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய- சீன- நேபாள நாட்டு எல்லையில் 370 சதுர கிமீ பரப்பளவு கொண்ட காலாபாணி, லிம்பியாதூரா, லிபு லேக் ஆகிய பகுதிகளில் பற்றம் ஏற்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் இந்திய எல்லைக்குட்பட்டு அதன் வரைபடத்தில் உள்ள இந்த மூன்று பகுதிகளையும், தனது வரைபடத்திற்குள் நேபாளம் சேர்த்ததால் பதட்டம் அதிகரித்துள்ளது.
இந்த மூன்று பகுதிகளையும் இந்திய வரைபடத்தில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நேபாளம், தங்களது வரைபடத்திற்குள் மாற்றங்கள் செய்து இந்த மூன்று பகுதிகளையும் சேர்த்துள்ளது.
இது தொடர்பாக இந்திய- நேபாள நாடுகளிடையே பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் கோவிட்- 19 தொற்று காரணமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று பாதிப்புகள் முடிந்த பின் இருதரப்பிலும் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று நம்புகிறேன்.
இந்தியாவுடன் நீண்டகால இணைப்பில் இருக்கும் காலாபாணி, லிம்பியாதூரா, லிபு லேக் ஆகிய மூன்று பகுதிகளையும் தங்களது வரைபடத்துக்குள் சேர்த்துள்ள நேபாளம், அதற்கான மசோதாவிற்கு ஒப்புதலை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அளித்திருக்கிறது. இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணுகிறீர்களா?
இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாயும், நேபாள பிரதமராக கிரிஜா பிரசாத் கொய்ராலாவும் இருந்த போது, இரு தரப்பிலும் வேறுபாடுகளைக் களைய பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வெளியுறவுத்துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தீர்வுகளை எட்ட இயலவில்லை. இருதரப்பிலும் பூசல்கள் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு லிபு லேக் பகுதியில் சாலை அமைக்க இந்தியாவும் சீனாவும் முடிவு செய்தன. இந்த முடிவு தங்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டது என்று நேபாள தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சாலை கட்டுமானம் நேபாளத்தின் வெள்ள பாதிப்புக்கு உள்ளானது.
இன்று இந்த சிக்கல் உணர்வுப்பூர்வமானதாக மாறியிருக்கிறது. வரலாற்று ஆவணங்களை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் நிச்சயம் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும்.
நேபாளத்தில் கம்யூனிச கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவுடனான தனது நிலைப்பாட்டை இறுக்கமாக்குவதாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது. இந்த இருநாடுகளும் நெருக்கமாக இருந்த அளவுக்குக் கூட இந்தியாவும் சீனாவும் இருந்ததில்லை என்று கருதப்படுகிறது. உண்மையா?
இது முக்கியமான, அதே நேரம் சுவாரஸ்யமான உண்மை. நேபாளத்தின் மூன்று எல்லைகளும் இந்தியாவை சுற்றியிருக்கின்றன. நேபாளத்தின் 70 சதவீத வர்த்தகம் இந்தியாவுடன் மட்டுமே நடந்து வருகின்றது.
ஒரு காலத்தில் மேற்படிப்புக்காக இந்தியாவை நம்பும் நிலையில் நேபாளம் இருந்தது. மாணவர்கள் தங்கள் மேற்படிப்புகளுக்காக லக்னோ, பனாரஸ், பாட்னாவுக்கு வந்தனர். இந்த நிலை தற்போது இல்லை.
இந்தியா தனது கலாச்சார, அரசியல், மதரீதியான கூட்டுறவை நேபாளத்துடன் கொண்டிருந்தது. நேபாள அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாகவே இருந்தது. ஆனால் 2005ஆம் ஆண்டு நேபாளத்தில் மாவோயிய அரசியல் நுழைந்ததும் இந்த நிலை மாறியது. ஆரம்ப நிலையில் இந்தியா அவர்களை தீவிரவாதிகள் என அறிவித்தது. ஆனால் பின்னர் அவர்கள் நேபாளத்தில் அரசியல் செயலாக்கங்களில் அதிகளவில் பங்களிக்கத் தொடங்கினர். இதன் பின்னர் இந்தியா தனது நிலைப்பாட்டை தளர்த்தி, அவர்களுடன் ஒருங்கிணைந்து, அரசாட்சிக்கு மாற்றாக ஜனநாயக ஆட்சியை அங்கு ஏற்படுத்த பாதை வகுத்துக் கொடுத்தது.