தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 16, 2020, 12:18 PM IST

ETV Bharat / bharat

இந்திய-பூட்டான் எல்லையில் சிக்கிய ஆயுதங்கள்!

திஸ்பூர்: இந்திய ராணுவம் மற்றும் அசாம் காவல்துறையின் கூட்டுக் குழு சிராங் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய-பூட்டான் எல்லையில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.

indo-bhutan-border-huge-cache-of-arms-and-ammunition-recovered-in-chirang
indo-bhutan-border-huge-cache-of-arms-and-ammunition-recovered-in-chirang

இந்திய ராணுவம் மற்றும் அசாம் காவல்துறையின் கூட்டுக் குழு சிராங் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய-பூட்டான் எல்லையில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்துள்ளது.

இதுகுறித்து சிராங் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் சிங் கூறுகையில், “கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளில் ஏழு கைத்துப்பாக்கிகள், மூன்று ரிவால்வர்கள், 192 கையெறி குண்டுகள், ஏ.கே. ரக துப்பாக்கியின் 200 தோட்டாக்கள் உள்ளன.

தேடுதல் வேட்டையில் சிக்கிய ஆயுதங்கள்

இங்கு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைந்த ரகசிய தகவலை தொடர்ந்து, கூட்டுக் குழு கடந்த 12 நாள்களுக்கும் மேலாக இந்தப் பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.

இந்த ஆயுதங்கள் அனைத்தும் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்தது. ராணுவத்தின் தேடல் கருவிகளை பயன்படுத்தி இதனை கண்டறிந்தோம்” என்றார்.

இதையும் படிங்க: ஆர்.எஸ். பாரதியின் பிணையை ரத்துசெய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன்?

ABOUT THE AUTHOR

...view details